சேரனாக மாறிய ஜெய், எக்ஸ் லவ்வருக்காக குடும்பத்தை மறக்கும் தீராக் காதல் ட்ரெய்லர்.. சூப்பரா! சொதப்பலா?

சமீபத்தில் தனியாக ஹீரோ படத்தில் நடிக்காமல் இரண்டு மூன்று ஹீரோக்குளுடன் சேர்ந்து நடித்து வருகிறார் ஜெய், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னணி ஹீரோவாக தீரா காதல் படத்தில் களம் இறங்கி இருக்கிறார். இப்படத்தை ரோஹின் வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு பெட்ரோமாக்ஸ் மற்றும் அதே கண்கள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக முதல்முறையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அத்துடன் ஷிவதா மற்றும் குழந்தை நடிகர் விருத்தி விஷால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது.

Also read: 2023ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்திய சினிமாவை மிரட்டி விடப் போகும் 5 படங்கள்.. போட்டி வேண்டாம் என விலகிய கமல்

மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இப்பொழுது இந்த ட்ரெய்லரின் கதையை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். அதாவது ஜெய்க்கு ஷிவதா உடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பது போல் கதை அமைகிறது.

ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு ரொம்பவே அன்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜெய் அவருடைய முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷை சந்திக்கிறார். அப்பொழுது இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்து பழகுகிறார்கள். ஆனாலும் ஐஸ்வர்யாவால் பழைய விஷயங்களை மறக்க முடியாததால் மீண்டும் ஜெய்யுடன் வாழ ஆசைப்படுகிறார்.

Also read: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் நெருக்கம் காட்டிய 4 படங்கள்.. விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த படம்

இதற்கு விருப்பமில்லாத ஜெய் தன் அழகான குடும்பங்களை பற்றி எடுத்துரைக்கிறார். இதனைக் கேட்ட  ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக அளவில் கோபப்படுகிறார். பிறகு ஜெய் இவரை பார்த்து உன்னை லவ் பண்ணினதை நினைச்சு இதுவரை நான் வருத்தப்பட்டதே இல்லை. ஆனா இன்னைக்கு நான் ரொம்ப பீல் பண்றேன் என்று ஜெய் சொல்கிறார்.

என்னதான் லவ்வர் பிரண்ட் என்று சொல்வதெல்லாம் போங்காட்டம். அதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு செட் ஆகாது என்று ஜெய் நண்பர் எடுத்துரைக்கிறார். இதனால் அதிகமாக கலங்கி போயிருக்கும் ஜெய் அவருடைய குடும்பத்துடனும் சகஜமாக பழக முடியாமல் அதே நேரத்தில் ஐஸ்வர்யா உடனும் சேர முடியாமல் தீரா காதலை கொண்டிருப்பது தான் இப்படத்தின் கதையாகும்.  அத்துடன் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது நமக்கு சேரன் படத்தை தான் ஞாபகப்படுத்துகிறது. இப்படம் ஜெய்க்கு சூப்பர் ஹிட் படமாக அமையுமா அல்லது சொதப்புமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

தீரா காதல் ட்ரைலர்

Also read: காசுக்காக சீப்பான வேலையை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாயில் வயிற்றில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்