கமல்ஹாசனால் சினிமாவையே வெறுத்த சேரன்.. மகாநதி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை!

சினிமாவைப் பற்றி முழுவதும் தெரிந்து நடிகர்களில் மிக முக்கியமானவர் கமலஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் டெக்னிகல் விஷயங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர்.
கமலஹாசனுடன் வேலை பார்க்கும் இயக்குனர்களுக்கு பெரும்பாலும் வேலையே இருக்காது என்பதுதான் உண்மை.

பெயருக்கு இயக்குனர் என வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் வேலையை கமலஹாசனே பார்த்துவிடுவார். கமலஹாசன் பட்டறையிலிருந்து இதுவரை பெரிய அளவில் எந்த ஒரு இயக்குனரும் சாதித்ததாக தெரியவில்லை. அவரை விட்டு வெளியேறிய பலர் தமிழ் சினிமாவில் இன்று தடம் பதித்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கின்றனர்.

அப்படி கமல்ஹாசன் படம் ஒன்றில் பணியாற்ற ஆசைப்பட்டு மகாநதி படத்தின்போது கமலஹாசனின் டார்ச்சர் தாங்க முடியாததால் பாதியிலேயே வண்டியை கிளப்பி வந்தவர்தான் சேரன். கேஎஸ் ரவிக்குமாரின் அஸிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றிய சேரனுக்கு கமலஹாசனுடன் எப்படியாவது ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என மகாநதி எனும் படத்தில் துணை இயக்குனராக சேர்ந்தாராம்.

kamal-cheran-cinemapettai-01
kamal-cheran-cinemapettai-01

மற்ற இயக்குனர்களுக்கும் கமல் இயக்கும் படங்களுக்கு பெரிய வித்தியாசம் இருந்ததாம். இயக்குனர் ஒருவராக இருந்தாலும் மொத்த வேலையும் கமலை செய்வாராம். இதனால் யாருக்கும் தொழில் கற்க முடியாமல் போய்விட்டதாம்.

அது கூட பரவாயில்லை தனக்கு பிடித்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்யச் சொல்வாராம். பேப்பரில் இருப்பது ஒன்று, படம் பிடிக்கும்போது ஒன்று என அனைவரையும் குழம்ப வைப்பதில் கில்லாடியாம் கமலஹாசன். மகாநதி படத்தின் இயக்குனர் சந்தானபாரதி தானே என கேட்கலாம். மாப்பிள்ளை இவர்தானுங்க, ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது. புரிஞ்சவன் பிஸ்தா!

இதனால் சினிமாவையே வெறுத்துப் போய் சேரன் பொட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாராம். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சேரன் ஓபனாகவே தெரிவித்துள்ளார். கமல் படங்களில் பெரும்பாலும் கமல்ஹாசனின் தலையீடு இருப்பதே பல படங்களின் தோல்விக்கு காரணம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்