ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

9 சாதி இருந்தும் கீழ்சாதி என்ற அடையாளம் மாறலை.. கவனம் ஈர்த்த சேரனின் தமிழ்குடிமகன் டீசர்

இயக்குனர் சேரன் எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். அவரது படங்கள் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி விடும். அந்த அளவுக்கு உணர்ச்சி பொங்கும் விதமான படங்களாக இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ் குடிமகன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் சேரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வக்கீல் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்ஏ சந்திரசேகர் நடித்துள்ளார். தமிழ்குடிமகன் படம் ஜாதி என்ற பெயரில் மக்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாக காட்டி உள்ளது.

Also Read : பெண்களுடன் நட்பு போற்றிய 5 சிறந்த தமிழ் படங்கள்.. வரலாற்றை மாற்றிய சேரன்

இந்தப் படத்தில் பிணங்களை எரிக்கும் வெட்டியானாக வேலை பார்க்கும் சேரன் கீழ் ஜாதி என்ற பெயரில் பல இன்னல்களை சந்திக்கிறார். ஆதிதிராவிடர், பட்டியல் இனம் என ஒன்றுக்கு ஒன்பது பெயர் இருந்தாலும் கீழ் ஜாதி என்று முத்திரை குத்தப்படுவதாக அனைத்து மக்களுக்கும் ஒருமித்த குரலாக சேரன் வசனங்கள் பேசி உள்ளார்.

மேலும் எனக்கான விடுதலையை நான் தான் போராடி பெற வேண்டும் என்று சேரன் முடிவெடுக்கிறார். கடைசியில் தானும் விடுதலை பெற்றது மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்த மக்களுக்கும் விடுதலை பெற்று தந்தாரா என்பதே தான் தமிழ்குடிமகன் படம். இந்த படத்தின் டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read : சேரன் பட சாயலில் 20 வருடத்திற்குப் பின் கிடைத்த அமோக வரவேற்பு.. ஹவுஸ் ஃபுல்லாக ஓடும் படம்

அதுமட்டுமின்றி சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இது போன்ற ஒரு கதையை சேரன் தேர்ந்தெடுத்து நடித்துள்ளதால் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த தமிழ் குடிமகன் டீசர் படத்தை பார்க்க ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Also Read : பள்ளி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய 7 படங்கள்.. ஞாபகத்தை மோசமாய் தூண்டிய சேரன்

- Advertisement -

Trending News