2021 ஐபிஎல்-லின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் முழு லிஸ்ட்.. டம்மி பீசுகளை களைபிடிங்கிய நிர்வாகம்

ஐபிஎல் அணியிலேயே அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு கிரிக்கெட் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சென்னை மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இதனை அவ்வப்போது ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்தாலே தெரியும்.

ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியில் டீ சர்ட் போட்டு இருந்த ஒரு ரசிகர் தோனி களத்தில் இறங்கியதும் மும்பை இந்தியன்ஸ்ன் டி ஷர்ட்டை தூக்கி எறிந்து விட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டீசர்ட் போட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருங்க முடியாத அளவிற்கு வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால் சமீபகாலமாக ஒரு சில கிரிக்கெட் வீரர்களின் அலட்சியத்தால் கோப்பையை தவறவிட்டனர்.

2021 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் முழு லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அந்தப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டனான எம் எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா, பிராவோ, ரவீந்திர ஜடேஜா, டு பிளசிஸ், குர்ரான், தாஹிர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் எப்பயும் போல இடம்பிடித்துள்ளனர். தற்போது இடம்பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இதோ

chennai super kings players
chennai super kings players

இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக வெற்றியை பெற்ற அணியில் முதலிடத்தை பிடித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதுமட்டுமில்லாமல் இரண்டு கோப்பை வாங்கி உள்ளது. தற்போது இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் தான் 2020 ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள இந்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மிகவும் மோசமாக விளையாடிய கேதர் ஜாதவ், மோனு சிங், ஷேன் வாட்சன், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங் என 6 வீரர்களையும் களை பிடுங்கி விட்டனர் என்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்களா என்பது மைதானத்தில் வீரர்கள் விளையாடும் விளையாட்டை பார்த்தால் தான் தெரியும்.