சந்திரமுகி 2 படத்தின் கதை இதுவா? செத்த பேய எத்தனை தடவைதான் வெட்டுவீங்க!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருப்பதையும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் தற்போது வரை இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட வில்லை.

ஆனால் சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான் என ஒரு சில வரிகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் செத்த பேயை எத்தனை தடவைதான் வெட்டுவீங்க எனும் அளவுக்கு இப்போவே சளித்து விட்டார்கள்.

அதாவது முதல் பாகத்தில் சந்திரமுகி என்ற பெண் பேய் பழி வாங்கியது போல தற்போது இரண்டாம் பாகத்தில் வேட்டையன் ராஜா சந்திரமுகியை பழிவாங்க மீண்டும் உருவெடுத்து வருவது போல் அந்த கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

chandramukhi-2-cinemapettai
chandramukhi-2-cinemapettai

மேலும் வேட்டையன் கதாபாத்திரம் மிக மோசமாகவும் கொடூரமாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என்பது போல படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.

தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தைப் பற்றிய தவறான செய்திகளை பரப்பி வருவதால் படக்குழு செம அப்செட்டில் உள்ளதாம். அதன் காரணமாக சந்திரமுகி படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை சரியான இடைவெளியில் அவ்வப்போது கொடுத்து விடலாம் என படக்குழுவினர் தேர்வு முடிவு எடுத்துள்ளார்களாம்.

- Advertisement -