23 கோடி முதலீடு, சக்ரா படத்தின் லாபம் எவ்வளவு தெரியுமா.? தலையில் துண்டை போட்ட விஷால்!

பல தடைகளைத் தாண்டி, விஷால் நடித்த சக்ரா திரைப்படமானது திரையரங்கில் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து, அறிமுக இயக்குனர் எம்.எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்திற்கு கூடுதல் பலமாக யுவன் இசையமைத்துள்ளார்.

எனவே தற்போதைய டெக்னாலஜி உலகில் என்னென்ன முறைகேடுகள் செய்யலாம் என்பது குறித்து இந்தப்படம் அலசி ஆராய்ந்து, மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவே ரசிகர்களின் பார்வையில் தென்படுகிறது.

இந்நிலையில் 23 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட சக்ரா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை குறித்து அறிந்ததும் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஏனென்றால் தமிழகத்தில் 425 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட சக்ரா படத்தின் வசூல் என்னவென்றால்,

  • மூன்று நாட்களில் – ரூ. 5 கோடி
  • ஏழு நாட்களில் – ரூ. 8.50 கோடி
  • ஷேர் கலெக்சன் –  ரூ. 4.50 கோடி

எனவே தமிழகத்தில் தியேட்டரிகள் ரைட்ஸ் மூலம் 11 கோடி 80 லட்சம் லட்சத்தை படத்தின் தயாரிப்பாளராக விஷால் வாங்கிய உள்ளார். ஆனால் தற்போதைய சூழலில் அவர் 7 கோடி 30 லட்சத்தை திருப்பி தரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

chakra-box-office
chakra-box-office

அதே போல் சாட்டிலைட் மட்டும் டிஜிட்டல் ரைட்ஸ் போன்றவற்றை சன் டிவி கேட்டபோது, அதனை விற்க மறுத்து விட்டார் விஷால். ஏனென்றால் டிஜிட்டல் ரைட்ஸை அடமானம் வைத்து, சில கோடிகள் விஷால் வாங்கியதால், சன்டிவியில் உடன் ஒப்பந்தம் போட மறுத்துவிட்டார்.

ஆகையால் சக்ரா படத்தின் மூலம் விஷாலுக்கு கிடைத்த மொத்த லாபம் வெறும் ரூ. 9,57 கோடியே, விஷாலின் சம்பளமாக 9 கோடியை எடுத்துக்கொண்டால், வெறும் 57 லட்சம் மட்டுமே தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் ஆக கருதப்படும்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, 23 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட சக்ரா படத்தின் லாபம், வெறும் 57 லட்சம் என்ற செய்தியை கேட்ட அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

- Advertisement -