வாயால் சீரழிந்த 6 சினிமா பிரபலங்கள்.. ஓவரா ஆடிய உலக அழகி மீரா மிதுனுக்கு வச்ச ஆப்பு

சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் ஒரு விஷயத்தை பேசும் போது மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் நாம் சாதாரணமாக சொல்லக்கூடிய கருத்துகள் கூட பல சர்ச்சைகளை கிளப்பி விடும்.

இதனால் சினிமாவில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பலரும் சர்ச்சையான சில விஷயங்களை நாசுக்காக கடந்து செல்வார்கள். அரசியல் சார்ந்த பிரச்சினைகள் என்றால் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் கையாளுவார்கள். ஆனால் சிலர் அதை செய்ய தவறி விடுகிறார்கள். அப்படி தவறும் போது பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி தங்களுடைய வாயால் சீரழிந்த சில பிரபலங்களை பற்றி காணலாம்.

சின்மயி : இவர் தமிழ் சினிமாவில் தன்னுடைய மென்மையான குரலால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். பாடுவது தவிர சினிமாவில் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது என்று படு பிஸியாக வலம் வந்தார். சில காலங்களுக்கு முன்பு இவர் கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடியாவில் தெரிவித்தார்.

மேலும் இது போன்று பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்கள் பலரைப் பற்றியும் பொதுவெளியில் கூறினார். அவருக்கு சக நடிகர்கள் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அவர் இந்த பிரச்சனையை பற்றி பேசிய பிறகு அவருக்கு சினிமாவில் எந்த படத்திலும் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சித்தார்த் : இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்தார்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் 5 நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார். சமீபகாலமாக அவர் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும் சில அரசியல் கட்சிகளைப் பற்றி பேசி அதனால் பல மிரட்டலுக்கு ஆளானார். இதனால் அவர் தற்போது பட வாய்ப்புகளை இழந்து வருகிறார்.

அஸ்வின் : இவர் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமாகி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்த புகழின் காரணமாக அவர் பெரிய திரையில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த முதல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது அவர் மேடையில் பேசிய பேச்சு பல எதிர்ப்புகளை கிளப்பியது.

அதாவது அஸ்வின் இந்தப் படத்திற்கு முன் 40 கதைகளை கேட்டதாகவும் அந்த கதைகளை கேட்கும் பொழுதே தூங்கி விட்டதாகவும் மேடையில் தெரிவித்தார். அவரின் இந்த திமிரான பேச்சைக் கேட்ட பலரும் அவரை கண்டபடி விமர்சித்தனர். இதனால் அவருடைய முதல் படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகியுள்ளது.

கஸ்தூரி : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. தற்போது எந்த பட வாய்ப்புகளும் முடியாமல் இருக்கும் இவர் சமூக வலைதளங்களில் சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி  சர்ச்சையான பல கருத்துக்களை பதிவிட்டு வருவார்.

இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அவர் அதெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து யாரையாவது வம்புக்கு இழுத்து பேசியபடி இருக்கிறார்.

மீரா மிதுன் : தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் பிடிக்காத ஒரு முகம் என்றால் அது மீரா மிதுன் ஆகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு இவரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும்  மக்கள் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதிலும் இவர் உலக அழகி ரேஞ்சுக்கு தன்னை பில்டப் செய்து பேசி அனைவரையும் எரிச்சல் படுத்தி வருகிறார்.  மேலும் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை பலரையும் வம்புக்கிழுத்து பேசி சமீபத்தில் சிறை வரை சென்றார். இன்னமும் அடங்காத மீரா மிதுன் தற்போது பல தேவையில்லாத விஷயங்களை பேசி அனைவரையும் கடுப்பேற்றி வருகிறார். ஓவரா ஆடியதால் உலக அழகி மீராமிதுன் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஜாதியை குறிப்பிட்டு பேசியதால் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

குஷ்பு : தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு பாப்புலராக இருந்தவர் நடிகை குஷ்பு. அதன் பிறகு திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆன இவர் தற்போது பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பதவியில் இருக்கிறார்.

இவர் ஒரு முறை கற்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். பெண்கள் விருப்பப்பட்டால் திருமணத்திற்கு முன்பு கூட உறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஒரு கருத்தை தெரிவித்தார். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்தது. குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல வழக்குகள் தொடரப்பட்டது.

இவ்வளவு எதிர்ப்புகளை எதிர் பார்க்காத குஷ்பூ மீடியாவில் தான் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டு கதறி அழுதார். அதன் பிறகு அந்த பிரச்சனை ஒருவாறாக முடிந்தது. தற்போது குஷ்பு சில விஷயங்களைப் பற்றி பேசும் பொழுது சற்று ஜாக்கிரதையாகவே பேசி வருகிறார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை