Sivakarthikeyan: இப்போது இணையத்தையே அல்லோபடுத்திக் கொண்டிருக்கும் சம்பவம் தான் சிவகார்த்திகேயனின் சர்ச்சை. இசையமைப்பாளர் டி இமான் சிவகார்த்திகேயனின் ஆரம்ப புள்ளியாக இருந்த நிலையில் இப்போது அவர் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இனி சிவகார்த்திகேயனின் படத்திற்கு தான் இசையமைக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் தனக்கு சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்றும் அதை அவர் சொன்ன பதிலை தன்னால் வெளியில் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார். இந்த சூழலில் இந்த விஷயம் இணையத்தில் பூதாகரம் எடுக்க சிவகார்த்திகேயனின் பெயருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தப்புக்கு மேல் தப்பு செய்வதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அதாவது பிறர் மனை நோக்காமை என்று திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் இருந்து ஒரு வரியை சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார். அதாவது நம்பி வீட்டில் விட்டவருக்கு சிவகார்த்திகேயன் துரோகம் செய்து இருக்கிறார்.
இந்த தப்பை செய்துவிட்டு இன்னும் அவர் தப்பு செய்து வருகிறார். சிவகார்த்திகேயனை பற்றி தவறான செய்தி இணையத்தில் பரவாமல் இருக்க பல கோடிகளை வாரி இறைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனை பற்றி மோசமான செய்தி வந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கவும் ஒருபுறம் வேலை நடந்து வருகிறதாம்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து பணம் கொடுக்கப்பட்டது என்றதற்கு ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். தேவைப்பட்டால் அதை வெளிப்படையாக வெளியில் விடவும் நான் அஞ்ச மாட்டேன் என்பது போல கூறி இருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்படியும் செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.
மேலும் இசையமைப்பாளர் இமானின் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு சாதகமாக பேசியது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். இந்நிலையில் இந்த மொத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் சிவகார்த்திகேயன் வாய் திறந்தால் தான் முடியும்.