நாலா பக்கமும் குவியும் நெகட்டிவ் விமர்சனங்கள்.. விசில் போடு பாடல் சர்ச்சைக்கு முடிவு கட்டிய பிரபலம்

Actor Vijay: விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் கோட் படம் உருவாகி வருகிறது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

விசில் போடு என தொடங்கும் அந்த பாடலில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா இருவரும் கலக்கல் நடனம் ஆடியிருந்தனர். ஆனால் அதற்கான வரவேற்பு தான் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை.

பாடலுக்கான வியூஸ் ஒரு சாதனையை படைத்திருந்தாலும் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்ததை மறுக்க முடியாது. பொதுவாக விஜய்யின் பாடல் வெளியானால் அது பயங்கரமாக கொண்டாடப்படும்.

ஆனால் இந்த முறை எதிர்பார்த்த ஏதோ ஒன்று குறைகிறதே என ரசிகர்கள் குமுறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இதுவே அனிருத்தாக இருந்தால் வேற லெவலில் பட்டையை கிளப்பி இருக்கும்.

விசில் போடு பாடலின் சர்ச்சை

யுவன் சங்கர் ராஜா சொதப்பிவிட்டார் என வெளிப்படையாகவே கூறுகின்றனர். இந்நிலையில் இப்பாடலை எழுதிய மதன் கார்க்கி ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதன்படி எல்லா பக்கமும் பாடலுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு சிலருக்கு தான் அதிருப்தி.

மற்றபடி அனைவரும் இதை கொண்டாடுகின்றனர். இருந்தாலும் இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். அனைத்தையும் பாசிட்டிவாக பார்க்க வேண்டும்.

மேலும் இப்பாடலுக்கு முதலில் சல்யூட் என்றுதான் பெயர் வைக்கலாம் என நினைத்தோம். அதன் பிறகு விசில் போடு என மாறியது.

நான்கு நண்பர்கள் பார்ட்டி கொண்டாடுவதை வைத்து தான் இப்பாடல் எழுதப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார் இதன் மூலம் பாடல் உருவான விதம் மட்டுமல்லாமல் சர்ச்சைக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்