ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஸ்ரீமதியின் மரணத்தில் வாய்க்கு பூட்டு போட்டுள்ள 8 பிரபலங்கள்.. ஹீரோயிசம் எல்லாம் சினிமாவில் மட்டும் தானா!

தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே ஒரு விஷயத்திற்காக தான் குரல் கொடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு தான் இறந்திருக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்களும், கலவரங்களும் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பலரும் மாணவியின் மரணத்திற்காக நியாயம் கேட்டு தங்கள் ஆதரவை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாக தமிழக அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் தற்போது அதிகரித்து வருகிறது.

இப்படி பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவிக்கு ஆதரவாக பொதுமக்கள் நியாயம் கேட்டு வரும் நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் இந்த விஷயத்தை பற்றி வாயே திறக்காமல் இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் நீட் தேர்வு, பொள்ளாச்சி சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்காக சூர்யா, கார்த்தி, விஜய், ஜிவி பிரகாஷ் போன்ற பல பிரபலங்கள் குரல் கொடுத்தனர்.

ஆனால் இப்படி ஒரு மரண சம்பவம் நிகழ்ந்திருக்கும் போது அவர்கள் எதுவும் கூறாமல் அமைதியை கடைப்பிடிப்பது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. மூத்த நடிகர்கள் சத்யராஜ், ரஜினிகாந்த் போன்றோர் இது போன்ற மக்கள் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பார்கள்.

ஆனால் அவர்கள் கூட இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மட்டும் இந்த விஷயத்தில் முதல் ஆளாக குரல் எழுப்பினார்.

அவரை தவிர மற்ற எந்த பிரபலங்களும் இந்த விஷயத்திற்காக ஒரு பதிவு கூட போடவில்லை. ஏனென்றால் இவர்கள் ஆளும் கட்சியை எதிர்த்து பேச விரும்பவில்லை. தற்போது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் டாப் ஹீரோக்களின் படங்களை வெளியிட்டு வருகிறது. இதன் காரணமாக தான் அவர்கள் இந்த விஷயத்தில் வாய்க்கு பூட்டு போட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

- Advertisement -

Trending News