நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பீரமாக எழுந்து நிற்கும் விஜயகாந்த்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் தடுமாறி வருகிறார்.

ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் நடிகர் சங்க பொறுப்புகளை ஏற்று அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் முடிந்த உதவிகளை செய்ததாக பலரும் அவரை புகழ்ந்து கூறி உள்ளனர்.

மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என கருத்தில் கொண்டு தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சி அளவுக்கு வளர்ந்தார்.

ஆனால் சமீபகாலமாக விஜயகாந்துக்கு பேச்சு திறன் குறைந்ததால் அதிகளவு மேடைகளில் பங்கேற்பதில்லை. அதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜயகாந்த் உடல் நிலையில் பல பிரச்சனைகள் இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரானா வந்தது. அதற்காக தீவிர சிகிச்சையில் இருந்தார் விஜயகாந்த்.

தற்போது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறதாம். மேலும் சமீபத்தில் தன்னுடைய திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பீரமாக எழுந்து நிற்கும் விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகின்றனர்.

vijayakanth-latest-photo
vijayakanth-latest-photo
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்