புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

புஸ்வானமாய் போன அண்ணனால் ராக்கெட் மாதிரி கிளம்பும் தம்பி.. விஜய் சேதுபதியை வளைத்து ஆடும் ஆட்டம்

ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவருடைய நடிப்பில் வெளியான அமர காவியம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் போகாததால் சினிமாவின் மிகப்பெரிய பிரேக் எடுத்து விட்டார். இப்போது மீண்டும் ஒரு வலுவான கதை மூலம் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

அதுவும் இப்போது அவருக்கு பிரமோஷன் கிடைத்தது போல விஜய் சேதுபதியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ மூலம் வைரலாகிக் கொண்டிருக்கிறார். அதாவது இயக்குனர் அமீர் சமீபத்தில் சென்னையில் இரண்டாவது உணவகத்தை தொடங்கி இருந்தார். சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதிக்கு அழைப்பு எடுக்கப்பட்டிருந்தது.

அதுவும் விஜய் சேதுபதியின் நியூ லுக் எல்லோரையுமே கவர்ந்தது. இதை தொடர்ந்து மிஷ்கின் படத்திற்காக தான் விஜய் சேதுபதி இந்த கெட்டப்பில் இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் சத்யாவும் கலந்து கொண்டார். காரணம் அமீர் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் தான் கதாநாயகனாக சத்யா நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் அமீர் ராஜன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் இப்போது சத்யா மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் மாயவளை என்ற படத்தை அமீர் தான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் 90களில் பகைவன், அதர்மம் போன்ற படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணா தான் மாயவளை படத்தை இயக்கி வருகிறார். மேலும் அமீருக்கு தோள் கொடுப்பதற்காக இந்தப் படத்தில் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து இருக்கிறார். அவருடைய கிராஸ் ரூட் நிறுவனம் இந்த படத்தை வெளியிட இருக்கிறது.

இப்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ரிலீசுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அந்த நிகழ்வில் விஜய் சேதுபதியுடன் சத்யா புகைப்படம் எடுத்திருக்கிறார். அதை பார்க்கும் போது அச்சு அசல் ஆர்யா போலவே சத்யா இருக்கிறார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக வருகிறது. மாயவளை படத்தின் மூலம் சத்யா கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் ஆர்யாவிற்கு எந்த படமும் ஓட வில்லை. இப்பொழுது அண்ணன் விட்ட இடத்தை தம்பி பிடிக்க எப்பொழுதுமே மார்க்கெட்டில் உள்ள விஜய் சேதுபதியை கெட்டியாக பிடித்துக் கொண்டார்

விஜய் சேதுபதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆர்யாவின் தம்பி சத்யா.

Arya-brother
Arya-brother
- Advertisement -

Trending News