சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டாங்க.! விஜய்யை பார்த்து கூட திருந்தாத சிவகார்த்திகேயன், தனுஷ்

அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் தெலுங்கு சினிமா பிரபலங்களின் ஆதிக்கம் சற்று அதிகரித்துள்ளது. உதாரணமாக தெலுங்கு முன்னனி நடிகர்களின் படங்கள் இங்கு ரிலீசாகி, இங்குள்ள முன்னனி நடிகர்களின் படங்களை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோற்கடிக்கப்படுகிறது. மேலும் அங்குள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இங்குள்ள முன்னனி நடிகர்களுடன் கூட்டணியில் இணைந்து வருவது வழக்கமாய் வருகிறது.

இதன் காரணமாக இங்குள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் மவுசு சற்று கேள்விக்குறியாகி வருவதால், இதுகுறித்த விவாதமும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளியும், அப்படத்தை தயாரித்த தில் ராஜுவும் தெலுங்கு சினிமாவில் காலூன்றியவர்கள்.இவர்கள் இருவரும் தமிழில் கால்பதித்து விஜய்யின் வாரிசு படத்தை உருவாக்கிய நிலையில், இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக ஓரளவு தான் வெற்றியடைந்தது.

Also Read: 300 கோடி வசூல் வந்தும் ஒரு பிரயோஜனம் இல்லை.. வாரிசால் புலம்பி தவிக்கும் தில் ராஜு

இதனிடையே தயாரிப்பாளர் தில் ராஜு முன்னனி நடிகர்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்கு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பு சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரணம் தில் ராஜு நடிகர் விஜய்க்கு செய்த மாபெரும் துரோகத்தை இவர்கள் இருவருக்கும் செய்து விடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் வாரிசு படம் தெலுங்கில் வாரிசுடு என்ற டைட்டிலில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அங்கு ரிலீசானது. ஆனால் இப்படத்தை ஜனவரி 12 ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸ் செய்யுமாறு நடிகர் விஜய், தில் ராஜுவிடம் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், வாரிசுடு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியவில்லை என்று சொல்லி விஜய்யை தில் ராஜு சமாளித்தார்.

Also Read: வாரிசு படத்தில் ஒரே சீனுக்கு 20 கோடி செலவு பண்ணி, கட் பண்ணிட்டாங்க.. தில் ராஜுவை கிழித்து தொங்க விட்ட தயாரிப்பாளர்

ஆனால் உண்மையில் வாரிசுடு படம் ஜனவரி 12 ஆம் தேதி தெலுங்கில் ரிலீசாகதற்கு காரணம் என்னவென்றால், அந்த தேதியில் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணனின் வீர சிம்ஹா ரெட்டி படம் ரிலீசானது. இதனிடையே இவரது படத்திற்கு போட்டியாக விஜய் படம் ரிலீசானால் கட்டாயம் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வசூல் ரீதியாக பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தில் ராஜு விஜய்யிடம் பொய் சொல்லி இப்படி ஒரு துரோகத்தை செய்தார்.

இது விஜய்க்கு தெரிய வந்து சில பிரச்சனைகள் ஆனது. இது தெரிந்தும் சிவகார்த்திகேயனும், தனுஷும் தில் ராஜு கூட்டணியில் இணைய போகிறார்கள். இந்நிலையில் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் இவர்கள் இருவரும் பட்டு திருந்தட்டும் என கோலிவுட் வட்டாரத்தில் உள்ள சிலர் கூறி வருகின்றனர்.

Also Read: செவுத்துல அடிச்ச பந்து போல் மாறிய விஜய் டிவி பிரபலம்.. சிவகார்த்திகேயன் போல் மாற முடியாததால் வேதனை

- Advertisement -

Trending News