200 கோடி பண மோசடியில் சிக்கிய பிரியாணி பட நடிகை.. சிறையில் இருந்து கொண்டே சித்து வேலை

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் தான் பிரியாணி. இப்படத்தில் நடிகர் கார்த்தி, ஹன்சிகா, நாசர், ராம்கி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் கடை திறப்பு காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். அதில் மூன்று அழகிகள் வருவார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகை லீனா மரியா.

தற்போது நடிகை லீனா மரியாவை டெல்லி காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். லீனா மரியா பிரபல தொழிலதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதியிடம் 200 கோடி ரூபாய் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறி லீனாவை கைது செய்துள்ளனர்.

Briyani-leena
Briyani-leena

இதுகுறித்து தொழிலதிபர் மனைவி அதிதி அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது, “தன் கணவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து லீனா பணம் வாங்கினார். ஆனால், அவர் ஜாமின் வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் திருப்புமுனையாக நடிகை லீனாவின் காதலர் சுகேஷ் சந்திரசேகர் கூறிதான் அவர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் நடந்த போது சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் இருந்ததாகவும், சிறையில் இருந்து கொண்டே அவர் லீனா மரியா மூலம் இந்த பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

leena-mariya-1
leena-mariya-1

இந்த வழக்கில் லீனா தவிர சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர்களான கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் லீனா மரியாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளம் நடிகை லீனா பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்