ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர்.. 1000 படத்திற்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை!

premananthan
premananthan

தென் இந்தியாவில் பல காமெடி நடிகர்கள் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளனர், அதில் மிக முக்கியமான காமெடி நடிகர் பிரம்மானந்தம். இவர் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு காலத்தில் புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் ஒரு நாளைக்கு 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவர் சினிமாவில் படைத்த சாதனைகள் மற்றும் வாங்கிய விருதுகள் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

brahmanandam
brahmanandam

இவர் எந்த அளவிற்கு புகழின் உச்சத்திற்கு சென்றாறோ அதே அளவிற்கு இவருடைய சம்பளமும் உச்சத்திற்கு சென்றது. கிட்டத்தட்ட ஒரு நாள் நடிப்பதற்கு 1 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

தெலுங்கானாவில் பல பணக்காரர்கள் வாழும் இடமான ஜூப்ளி ஹில்ஸ் எனும் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

2009ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. ஆனால் இவருக்கு மெதுவடை, சாம்பார் என்றால் மிகவும் பிடிக்குமாம். ஒரு காலத்தில் சினிமாவில் இவரை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்று கூட கூறலாம்.

அந்த அளவிற்கு இவர் நடிப்பில் வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளன. அதுமட்டுமில்லாமல் தற்போது வரை பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் தொடர்ந்து பாராட்டை பெற்று வருகிறார்.

Advertisement Amazon Prime Banner