சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இரண்டு பக்கமும் ரஜினிக்கு கொடுக்கும் நெருக்கடி.. ரேசில் இருந்து விலகும் உலக நாயகன்

பொதுவாகவே ரஜினி படங்கள் என்றாலே கமர்சியலாக தான் இருக்கும். அத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்று அதிக கவனம் செலுத்தி கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படிப்பட்ட இவர் படங்கள் சமீப காலமாக வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கொஞ்சம் டல்லாக தான் அமைகிறது.

ஆனாலும் இவருக்கு இருக்கும் மவுஸ் மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் இவருடைய ரசிகர்கள் என்றே சொல்லலாம். இவர் படங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என் தலைவரை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று பல கோடி ரசிகர்கள் இவர் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த பதினாறு வயதினிலே ‘பரட்டை’.. ஸ்ரீதேவியை விட கம்மி சம்பளம் வாங்கிய சூப்பர்ஸ்டார்!

அப்படி இருக்கையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜெயிலர் மற்றும் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ரஜினியின் 171 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் லோகேஷ் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளி வந்திருக்கிறது.

அடுத்ததாக இந்தப் படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் இந்த படத்திற்கு இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து இருப்பதால் பெரிய லாபத்தை பார்க்கலாம் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் ரஜினியிடம் தனிப்பட்ட முறையிலும் இதைப் பற்றி பேசி அவருக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கிறார்கள்.

Also read: ரஜினியை புறக்கணித்து கமலிடம் தஞ்சமடைந்த நடிகை.. அம்மா சிபாரிசு செய்தும் பலிக்காத பாட்சா

ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் போட்டி போட்டு வருகிறது. ஆனால் ரஜினிக்கு இவர் தயாரிப்பில் நடித்தால் அது எப்படி அமையும் என்பது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் இந்த தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வசூலை குவித்து இருந்தாலும் எதிர்மறையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதனால் சென்டிமெண்டாக கொஞ்சம் யோசிக்கிறார்.

அடுத்ததாக தயாரிப்பாளர் லலித் தொலைபேசி மூலமாக இவரை வலைவீசி வருகிறார். ஆனால் கடைசியில் யார் தயாரிக்கப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. இதற்கிடையில் இந்த படத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் போது ஆரம்பத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க போவதாக ஒரு பேச்சு அடிபட்டது. நண்பராக இருக்கும் ரஜினிக்காக ராஜ் கமல் பிலிம்ஸ்  தயாரிப்பதாக ஒரு செய்தி உலாவி கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது கமல் இந்த ரேசிலிருந்து விலகிவிட்டார்.

Also read: மனிதன் vs நாயகன் உண்மையில் ஜெயித்தது யார்? உண்மையை புட்டு புட்டு வைத்த தயாரிப்பாளர்

- Advertisement -

Trending News