சினிமாவை பொறுத்தவரையில் ஏற்றமும், இறக்கமும் எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பெரிய நடிகர் என்ற காரணத்தினால் மட்டுமே ஒருவரின் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுவது இல்லை.
தரமாக இருந்தால் மட்டும்தான் கல்லா கட்ட முடியும். அப்படி ஒரு சம்பவம் தான் அந்த பாலிவுட் நடிகருக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அந்த திரைப்படத்தால் அவருடைய மார்க்கெட் சரியும் நிலைக்கு சென்றுள்ளது. மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டு வெளியான அந்த திரைப்படம் தற்போது பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.
ஹாலிவுட்டில் மிகப்பெரும் வெற்றி பெற்ற அந்த படத்தை நடிகர் பிரம்மாண்டமாக ரீமேக் செய்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் சரியாக ஓடவில்லை. அது மட்டுமல்லாமல் நடிகரை தற்போது பலரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனால் எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் நடிகர் இருக்கிறார். இதற்காக தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் அந்த இயக்குனருக்கு அவர் போன் போட்டுள்ளாராம்.
பாலிவுட்டிலும் மிகப் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குனர் நடிகரின் பிரச்சினையை கவனமாக கேட்டிருக்கிறார். மேலும் நடிகரும் எப்படியாவது எனக்கு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சி கேட்காத குறையாக பேசினாராம். ஆனாலும் இயக்குனரால் உடனே முடிவு கூற முடியவில்லையாம்.
சில கால அவகாசம் கேட்டிருக்கும் இயக்குனர் கூடிய விரைவில் நடிகரை நேரில் சந்தித்து பேச இருக்கிறாராம். ஆனாலும் நடிகருக்காக அவர் படம் இயக்குவாரா, மாட்டாரா என்பதுதான் பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.