ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அட்லி போன்றவர்களால் தான் பாலிவுட் படங்கள் தோல்வியடைகிறது.. வாய்க் கொழுப்பால் மாட்டிய பிரபலம்

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அட்லி தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பின் போது வெளியான வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் அட்லியின் வெற்றியை பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஹிந்தி நடிகர் அனுராக் கஷ்யப் ஹிந்தி படங்கள் தோல்வி பெறுவதற்கான காரணம் என்ன என்று விளக்கமளித்துள்ளார். அதாவது அவரிடம் தென்னிந்திய படங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. ஆனால் பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வியை பெறுவது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் இந்தி தெரியாதவர்கள் கூட ஹிந்தியில் படம் எடுக்க வந்து விடுகிறார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு திரையுலகில் அப்படி கிடையாது. அவர்களது கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து தான் படங்களை இயக்குகிறார்கள். அதனால்தான் தென்னிந்திய படங்கள் வெற்றி பெறுகிறது என்று கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனுராக் கஷ்யப் அட்லியை தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தமிழில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் திரைப்படத்தை ஹிந்தியில் இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.

இப்படி தமிழ் படத்தை காப்பி அடித்து ஹிந்தியில் படம் இயக்கியுள்ள இவருக்கு அட்லியை பற்றி பேச தகுதி இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் அவருடைய இந்த பேச்சுக்கு அட்லி தன்னுடைய ஜவான் படத்தின் மூலம் பதிலடி கொடுப்பார் என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

Trending News