தளபதியை வைத்து பப்ளிசிட்டி தேடும் பாலிவுட்.. இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய் 69

தளபதி விஜய் தற்போது தனது 68 வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் மற்றும் விஜய் இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய்தத் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் விஜய் 69 என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத தளபதி ரசிகர்கள் விஜய்யின் 69 ஆவது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளதா என பார்த்துள்ளனர். ஆனால் விஜய்யை வைத்து பப்ளிசிட்டிக்காக பாலிவுட் செய்த வேலை அது.

Also Read : படப்பிடிப்பில் தனக்கு நடந்த மோசமான ஆக்சிடென்ட்.. உயிரைக் காப்பாற்றியது யாருன்னு தெரிவித்த விஜய் ஆண்டனி

இப்போது பாலிவுட் சினிமா மிகுந்த சருக்கலை சந்தித்து வருகிறது. கடைசியாக ஷாருக்கானின்  பதான் படத்தினால் ஓரளவு மீண்டும் பாலிவுட் சினிமா மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. இதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பல யுத்திகளை அவர்கள் கையாண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அனுபம் கேர் 60 வயதைக் கடந்தும் தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் YRF என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு இவர் ஒரு படம் பண்ண உள்ளார். இந்நிறுவனம் இதற்கு முன்னதாக தி ரொமான்டிக்ஸ் என்ற படத்தை தயாரித்திருந்தது.

Also Read : மனோபாலாவுக்காக கடைசி ஆசையை நிறைவேற்றிய லியோ.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த விஜய்யின் புகைப்படம்

இதற்கு அடுத்தபடியாக வாணி கபூர் நடிப்பில் உருவாகும் படத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. இந்நிலையில் தனது நிறுவனத்தின் மூன்றாவது படமாக அனுபம் கேர் படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கான டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு விஜய் 69 என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் ஒரு முதியவர் சைக்கிள் ஓட்டும் படியான போஸ்டர் வெளியாகி இருக்கிறது. விஜய் 69 தளபதி படத்திற்கான அப்டேட் என ட்விட்டரை ரசிகர்கள் பார்த்தனர். ஆனால் அது பாலிவுட் படம் என்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் தளபதிக்காக இந்த ஹேஷ்டேக் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

vijay-69

Also Read : விஜய் படத்தில் சம்பாதித்ததை மொத்தமாக இழந்த தில் ராஜு.. ஒரே படத்தால் கேரியரை க்ளோஸ் செய்த நடிகை