அந்த விஷயத்தில் தல கில்லாடி தான்.. அஜித்தை புகழ்ந்த வலிமை பட நடிகை

அஜித்துடன் வலிமை படத்தில் நடித்த நடிகை ஒருவர் குறிப்பிட்ட விஷயத்தில் தல கில்லாடிதான் எனக் கூறியுள்ளது தல ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. மேலும் அந்த நடிகை வலிமை படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு மேல் தல அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே சூட்டிங் பாக்கியுள்ள நிலையில் விரைவில் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தல அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிப்பது உறுதியாகி உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தல அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியது தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் வலிமை படத்தை பற்றியும் புகழ்ந்து பேசியுள்ளார்.

வலிமை படத்தில் பைக் ஸ்டன்ட் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். அதில் தல அஜித் தான் ஹீமா குரேஷிக்கு பைக் ஓட்டக் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் பைக் ஓட்டுவதற்கும் சில டெக்னிக் சொல்லிக் கொடுத்தாராம். பைக் பற்றிய விஷயங்களில் தல கில்லாடிதான் எனவும் புகழ்ந்து பேசியுள்ளார் ஹீமா குரேஷி.

தல அஜித் மற்றும் ஹீமா குரேஷி இருவரும் இணைந்து ஒரு பைக் ஸ்டன்ட் காட்சியில் நடிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த காட்சி மிக பிரமாண்டமாக உருவாகி இருப்பதாகவும், படத்தின் முக்கிய அம்சமே அதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ajith-huma-cinemapettai
ajith-huma-cinemapettai

ஏப்ரல் மாத தொடக்கத்தில் வலிமை படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று பாக்கியுள்ள காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார்களாம். அதனைத் தொடர்ந்து வலிமை படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -