சீயான்60 படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நடிகர்.. இனி படம் பிளாக்பஸ்டர் தான்!

chiyaan60-cinemapettai
chiyaan60-cinemapettai

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. அதில் யார் ஹீரோ என்பதையெல்லாம் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கார்த்திக் சுப்புராஜ் படமா, நாங்க தியேட்டருக்கு வர ரெடி என்கிறார்கள்.

அந்த அளவுக்கு கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் சீயான் விக்ரமுடன் இணைந்து சீயான் 60 எனும் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் நடிக்க உள்ளார்.

இதற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நடிகரான பாபி சிம்ஹா சீயான்60 படத்தில் ஒப்பந்தமாகியதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. பாபி சிம்ஹா மற்ற படங்களில் எப்படி நடித்தாலும் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் அவரது நடிப்பு தனியாக தெரியும்.

bobbysimha-joins-chiyaan60
bobbysimha-joins-chiyaan60

இன்றும் ஜிகர்தண்டா படத்தை பற்றி பலரும் பேசுவதற்கு அதுதான் காரணம். ஆனால் கடைசியாக பேட்ட படத்தில் அவருடைய கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால் இந்த முறை கண்டிப்பாக மிருகத்தனமான கதாபாத்திரம் தான் என்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜ் வட்டாரங்கள்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அனிருத்தை தூக்கிவிட்டு மீண்டும் தன்னுடைய விருப்பமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் படத்தில் இணைந்து சீயான் 60 படத்தை பலப்படுத்தியுள்ளது. கண்டிப்பாக ஜிகர்தண்டா போல் ஒரு பக்கா கேங்ஸ்டர் படத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Advertisement Amazon Prime Banner