ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அஜித்தை மீண்டும் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்.. இவர் சொல்றதும் சரிதான்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைப் பற்றி திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமன்றி அஜித்தை பற்றி உருவ கேலியும் செய்திருந்தார்.

இதனால் அஜீத் ரசிகர்கள் கொந்தளித்தனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் கண்டனங்களை தெரிவித்தனர். நடிகர் ஆரி அர்ஜுனும் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ப்ளூ சட்டை மாறனை நேரடியாக எச்சரித்தார். அஜித் தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது அஜித் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. இதனால் தினமும் அஜித் ட்ரெண்டிங்கில் உள்ளார். இதைப்பற்றியும் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

அதாவது அஜித் எந்த விழாக்கள், ஆடியோ லான்ச் போன்ற விஷயங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் வருடத்திற்கு 365 அஜித் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும். கேட்டால் அஜித்துக்கு பப்ளிசிட்டி பிடிக்காது யாரோ அனுமதியின்றி அவருடைய போட்டோவை எடுத்த போடுகிறார்கள் என கூறுவார்கள்.

இவ்வாறு அஜித்தை கண்டபடி விலாசி எடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ஆனால் தற்போது ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவாக சிலர் பேசி வருகின்றனர். அதாவது அஜித் தனது சொந்த வாழ்க்கையை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக வைத்துக்கொள்வார். இதனால்தான் எந்த சமூக வலைதள பக்கத்திலும் அஜித் இடம்பெறவில்லை.

அப்படி இருக்கும்போது எதற்கு வெளியில் செல்லும் புகைப்படங்களை எல்லாம் வெளியிடுகிறார். அதுவும் அஜித்துக்கு தெரியாமல் இந்த புகைப்படங்கள் கண்டிப்பாக வெளியாகாது. ஏனென்றால் சமீபத்தில் அஜீத்தின் மேனேஜர் தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டார்.

இதனால் பப்ளிசிட்டிக்காக தான் அஜித் இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் என கூறுகின்றனர். ஆனால் அஜித்துக்கு எதற்கு பப்ளிசிட்டி அவரே மிகப்பெரிய ஸ்டார் ஆக உள்ளார் என ஏகே ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News