சல்மான் கானால் மன உளைச்சலுக்கு ஆளான ப்ளூ சட்டை மாறன்.. உசுர கையில புடிச்சுகிட்டு பார்த்த படம்

சோசியல் மீடியா பிரபலமாகிவிட்ட இந்த சமயத்தில் ஒரு படம் வெளியான உடனேயே பல சேனல்கள் அதன் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறது. ஆனாலும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் அவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என எந்த பாராபட்சமும் பார்க்க மாட்டார்.

ஒரு படம் தரமாக இல்லை என்றால் சகட்டு மேனிக்கு அனைவரையும் கழுவி ஊற்றி விடுவார். அதில் கொஞ்சம் ஓவராக அவர் விமர்சித்த சில திரைப்படங்களும் இருக்கிறது. இருப்பினும் அவருடைய விமர்சனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதில் அவர் நேற்று வெளியான சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜான் படம் பற்றிய தன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

Also read: வெறும் 7 கோடி பட்ஜெட்டில் உருவான யாத்திசை.. முதல் நாள்மொத்த வசூல் ரிப்போர்ட்

ஏற்கனவே இப்படம் பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது. அதில் ப்ளூ சட்டை மாறனும் தன் பங்கிற்கு கிழித்து தொங்க விட்டு இருக்கிறார். தமிழில் சூப்பர் ஹிட் அடித்த வீரம் திரைப்படத்தின் ரீமேக் தான் இப்படம். ஆனால் அதன் ரீமேக் என்று சொல்ல முடியாத அளவுக்கு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் வீரம் படத்தில் சென்டிமென்ட், காதல், ஆக்சன் என அனைத்துமே சரிவிகிதத்தில் இருக்கும். ஆனால் இப்படத்தில் இயக்குனர் மொத்த கதையையும் சொதப்பி வைத்திருக்கிறார். அதாவது அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் என்ன எங்களுக்கு காதல்தான் முக்கியம் என்று சல்மான் கானின் தம்பிகள் பேசுவது போல் காட்சி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சல்மான் கான் எடுத்து வந்து வளர்ப்பது போன்று கதையை சொல்லி இருக்கின்றனர். படம் ஆரம்பித்த 20 நிமிடங்களிலேயே இப்படி சென்டிமென்ட் டிராக்கில் செல்லும் கதை போக ரசிகர்கள் உயிரை கையில் பிடித்தபடி படத்தை பார்க்கும் அளவுக்கு நகர்கிறது.

Also read: விஜய்க்கு தம்பியாக நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட குட்டி பார்த்திபன்.. அதனாலயே காணாமல் போன பரிதாபம்

இதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் இப்போது மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாராம். அந்த அளவுக்கு வீரம் படத்தை ஹிந்தியில் கொத்து பரோட்டாவாக்கி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பாடல் காட்சிகளில் ஆயிரம் பேருக்கு நடுவில் சல்மான் கான் ஆடும்படியாகவும் இயக்குனர் காமெடி செய்திருக்கிறார். இப்படி எங்கு திரும்பினாலும் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து தள்ளிவிட்டார்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுக்க முழுக்க செட் போட்டு தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்துமே செயற்கையாகவே இருக்கிறது. அதிலும் மெட்ரோ ரயில் சண்டை காட்சியை பார்த்து போக்குவரத்தே ஸ்தம்பித்து போய்விட்டது என்று அவர் கழுவி ஊற்றி இருக்கிறார். இப்படி சல்மான் கானால் மன அழுத்தத்துக்கு ஆளான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை பற்றிய தன் விமர்சனத்தை ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

Also read: விஜய்யுடன் நடித்து முன்னேற துடித்த வாரிசு நடிகர்.. 10 நிமிட காட்சியோடு துரத்தி விட்ட லோகேஷ்