எம்மாடியோ! லியோ கலவரத்துல நம்மளை மறந்துட்டாங்க.. சிவகார்த்திகேயனை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை

Sivakarthikeyan Controversy: ஏகப்பட்ட பிரச்சனைகளின் மத்தியில் ஒரு வழியா நேற்று விஜய்யின் லியோ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு வசூலில் நல்ல ஓபனிங் கிடைத்திருந்தாலும் நெகட்டிவ் கமெண்ட்களும் குவிகிறது. இதனால் தளபதி ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் இடையே வாக்குவாதம் வெடிக்கிறது.

எப்படியோ விஜய்யின் லியோ கலவரத்துல நம்மளை மறந்துட்டாங்க என்பது தான் இப்போது சிவகார்த்திகேயனின் மனநிலமையாக இருக்கிறது என்று திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எஸ்கே-வை பங்கம் செய்துள்ளார் . பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும் என்று ஒவ்வொருவரும் சிவகார்த்திகேயனை புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்போது அவர் மீது டி. இமான் கொடுத்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைய மாட்டேன், இந்த ஜென்மத்தில் அவரது படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு பச்ச துரோகத்தை தான் சிவகார்த்திகேயன் எனக்கு செய்திருக்கிறார்’ என்று டி. இமான் சமீபத்திய பேட்டியில் கண் கலங்கினார்.

அப்படி என்ன துரோகம் செய்தார்? என கேட்டபோது, ‘அவர் செய்த துரோகத்தை வெளியில் சொன்னால் அது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். அதனால் சொல்ல மாட்டேன்’ என்று இலை மறை காயாக பேசினார். இதனால் இஷ்டத்திற்கு கண்ணு மூக்கு வைத்து சிவகார்த்திகேயனை தரைகுறைவாக பேசுகிறார்கள்.

அதுவும் சிவகார்த்திகேயனுக்கும் டி. இமானின் முதல் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கொளுத்தி போடுகின்றனர். இவ்வாறு சிவகார்த்திகேயன் டி. இமான் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்த இந்த நேரத்தில் தான் விஜய்யின் லியோ படம் ரிலீஸ் ஆனது.

இப்போது எல்லோருக்கும் லியோ படம் தான் பேசும் பொருளாகி விட்டது. அதனால் சிவகார்த்திகேயனை குறித்த சர்ச்சையை மறந்து விட்டனர். அதனால் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுவின் போஸ்டருடன் ‘அப்பாடா! லியோ கலவரத்துல நம்மளை மறந்துட்டாங்க’ என்று சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு ட்விட் செய்துள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.

சிவகார்த்திகேயனை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன் ட்விட்

review-blue-sattai-maran-twit-cinemapettai
review-blue-sattai-maran-twit-cinemapettai