வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வீடியோவை கட் செய்து தளபதியை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

சினிமா விமர்சகர் என்ற பெயரில் தேவையில்லாமல் டாப் நடிகர்களை வம்பிழுப்பதையே வேலையாக வைத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய்யை சீண்டி இருக்கிறார். ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இவரின் வாரிசு திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறார். அதாவது பல வருடங்களுக்கு முன்பு கமல், விஜய் குறித்து பேசிய ஒரு வீடியோவை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கமல், விஜய் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த வீடியோவின் இறுதியில் விஜய் அதைக் கேட்டு அழுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் தற்போது ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளனர்.

ஏனென்றால் கமல், விஜய் பற்றி என்ன கூறினார் என்ற முழு வீடியோவையும் வெளியிடாமல் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்ட சில நிமிடங்களை மட்டுமே கட் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலடி தரும் விதமாக விஜய்யின் ரசிகர்கள் தற்போது முழு வீடியோவையும் வெளியிட்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

உண்மையில் கமல் அந்த வீடியோவில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல விஜய் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முள்ளும் மலரும் போன்ற கதைகளையும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பது ஒரு ரசிகனாக, தொழில்நுட்ப கலைஞனாக என்னுடைய ஆசை என்று தெரிவித்திருந்தார்.

அதில் எந்த இடத்திலும் விஜய் குறித்து கமல் தவறாக எதுவுமே பேசவில்லை. ஆனால் ப்ளூ சட்டை மாறன் வேண்டுமென்றே கமலயும், விஜய்யும் வைத்து சகுனி வேலை பார்த்துள்ளார். இதனால் கமல் மற்றும் விஜயின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Trending News