விஷால் ஒரு சங்கி, வில்லன் காமெடி பீசு.. ப்ளூ சட்டையிடம் சிக்கி சின்னாபின்னமான ரத்னம்

Blue Sattai Maaran-Ratnam: ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் நேற்று ரத்னம் படம் வெளியானது. கடந்த சில வாரங்களாகவே படத்திற்கு ஏகப்பட்ட பிரமோஷனை செய்து ஒரு எதிர்பார்ப்பை படக்குழு உருவாக்கி இருந்தது.

அதனாலேயே நேற்று முதல் காட்சியை பார்த்துவிட்டு ஆடியன்ஸ் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர். ஆனால் தற்போது ப்ளூ சட்டை என்ன படம் எடுத்து வச்சிருக்கீங்க? இதெல்லாம் ஒரு கதையா? என கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

இது வழக்கமாக அவர் பேசுவது தான் என்றாலும் ரத்னம் படத்தை கொஞ்சம் ஓவராகவே போட்டு தள்ளியிருக்கிறார். அதன்படி ஊரில் நடக்கும் தப்பையெல்லாம் தட்டிக் கேட்கும் நல்ல ரவுடியாக இருக்கிறார் விஷால்.

அவர் ஒரு காரணத்துக்காக ஹீரோயினை பாதுகாக்கிறார். அதனால் ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல் வருகிறது. ஆனால் விஷால் ஹீரோயினை அம்மா ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார்.

ரத்னம் படத்துக்கு வந்த சோதனை

இப்படி முரண்பட்ட கதையாக இருக்கிறது. இது சென்டிமென்ட் கிடையாது. ஆன்ட்டி செண்டிமெண்ட். ஹீரோ அம்மாவாக பார்க்கும் பெண் எப்படி அவரை காதலிக்கலாம் என ப்ளூ சட்டை மாறன் இயக்குனரை பங்கம் செய்திருக்கிறார்.

அதேபோல் கடைசிவரை சோதனையாக செல்லும் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் வேறு தன் பங்குக்கு சோதிக்கிறார். படம் முழுவதும் பின்னணி இசை, பாடல் என ஒரே இரைச்சலாக இருக்கிறது.

மேலும் தலைவர் ஒரு சங்கி என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் விஷால் நான் ஒரு சங்கி என படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார். நீட் தேர்வில் கவர்மெண்ட் காலேஜில் சீட் கிடைக்காத ஹீரோயின் அடுத்தடுத்து பரிட்சை எழுதுகிறார்.

இறுதியில் கவர்மெண்ட் காலேஜில் அவருக்கு சீட் கிடைத்து விடுகிறது. நீட் தேர்வே வேண்டாம் என்று நாம் போராடுகிறோம். அப்படி இருக்கும்போதே இதெல்லாம் தேவையில்லாதது என ரத்னம் படத்தை ப்ளூ சட்டை சின்னா பின்னமாக்கி இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்