ப்ளூ சட்டைக்கு ஜால்ரா தட்டும் பிஸ்மி.. விஜய் ஆண்டனிக்கு எதிரா ஒன்னு கூடிய அரைவேக்காடுகள்

Actor Vijay Antony: சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது. அதில் பலரும் தனி சேனல்களை ஆரம்பித்து சினிமா கன்டென்ட் கொடுத்து வருகின்றனர்.

அப்படி ஆதரவு, எதிர்ப்பு இரண்டையும் சம்பாதித்தவர்களின் லிஸ்ட்டில் பிஸ்மி, ப்ளூ சட்டை மாறன் ஆகியோர்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. அதில் ப்ளூ சட்டை மாறனை பற்றி சொல்லவே வேண்டாம்.

எல்லா பக்கமும் இவருக்கு எதிர்ப்பு இருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் ரோமியோ படத்தை இவர் கண்டபடி கலாய்த்து தள்ளி இருந்தார். அதில் கடுப்பான விஜய் ஆண்டனி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

ப்ளூ சட்டைக்கு ஜால்ரா போடும் பிஸ்மி

இது பரபரப்பை கிளப்பிய நிலையில் பிஸ்மி ப்ளூ சட்டைக்கு ஆதரவு தெரிவித்து ஒரு வீடியோ போட்டு இருக்கிறார். அதில் மாறன் ஒரு அறிவு ஜீவி என்ற ரீதியில் பேசி இருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் சாத்தான் வேதம் ஓதுதா, வேலிக்கு ஓணான் சாட்சி என கிண்டல் அடித்தனர். ஆனால் தற்போது ப்ளூ சட்டை மாறன் அந்த வீடியோவை ஷேர் செய்து தனக்குத்தானே பப்ளிசிட்டி தேடி உள்ளார்.

இதையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. நீங்கள் இரண்டு பேருமே அரைவேக்காடு தான். இப்படியே மாத்தி மாத்தி ஜால்ரா தட்டிக்கிட்டு இருங்க.

ஆனால் அதில் ஒரு பிரயோஜனமும் கிடையாது என கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். மேலும் இப்படி எல்லாம் வீடியோ போட்டு விஜய் ஆண்டனியை வெறுப்பேற்றுகிறீர்களா? எனவும் சில ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்