கருப்பு நிற அம்மன் வேடத்தில் பிக்பாஸ் சுருதி.. அட்டகாசமாக வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த ஐந்தாவது சீசனில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மத்தியில் பரிச்சயமான நபர்களாக இருக்கின்றனர். உதாரணமாக VJ பிரியங்கா, இமான் அண்ணாச்சி, பாடகி சின்னப்பொண்ணு, சின்னதம்பி சீரியல் கதாநாயகி பவானி ரெட்டி போன்ற நபர்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நன்கு அறிந்தவர்கள்.

பிற போட்டியாளர்கள் எல்லாம் அவரவரின் கதைகளை பற்றி கூறும் போதே மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் பிரபல கன்னட மாடலாக இருப்பவர்தான் சுருதி ஜெயதேவன். இவர் பிறந்தது முதல் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை அனுபவித்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அத்துடன் இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்ததால், விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் சென்னையில் உள்ள பிரபல இஞ்சினியரிங் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்பிறகு அவருடைய தோழியின் மூலம் மாடலிங் துறையில் பணியாற்றிய வாய்ப்பைப் பெற்றார்.

bb5-suruthi-cinemapettai
bb5-suruthi-cinemapettai

பொதுவாக அம்மன் வேடம் தரித்த மாடல்களெல்லாம் கலராக இருப்பார்கள். ஆனால் தமிழ் கடவுள் லட்சுமி கருப்பு நிறத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சுருதியை வைத்து பிரபல நிறுவனம் ஒன்று புகைப்படத்தை எடுத்து வெளியிட்டது. இந்த புகைப்படமானது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அதன்பிறகு மாடல் சுருதிக்கு மாடலிங் துறையில் எக்கச்சக்கமான வாய்ப்புகள் பெற்று, தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும் கருப்பு நிற லட்சுமியாக வேடம் தரித்த சுருதியின் இந்த புகைப்படம் ஆனது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதியை பற்றி பகிர்ந்துகொண்ட பிறகு, மேலும் வைரலாக பரவி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்