ஒரு ஓட்டால் உலக பேமஸ் ஆன பாஜக பிரமுகர்.. ஒரே மீம்ஸில் கிழித்த நெட்டிசன்கள்

நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு வோட்டினை வாங்கிய பாஜக பிரமுகர் பற்றிய செய்திதான் சமூக வலைதளங்களில் இன்றைய ட்ரெண்டிங்.

இந்த பரிதாபத்துக்குரிய பிரமுகர் கோவை தொகுதியில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர். இவருடைய குடும்பத்தில் ஐந்து நபர்கள் இருந்தும் இவரால் ஒரு ஓட்டு தான் வாங்க முடிந்தது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சமூகத்தில் வாசிகள் “ஒத்த ஓட்டு பாஜக”, “சிங்கிள் வோட் பிஜேபி” என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைத்தளத்தில் தெறிக்க விடுகின்றனர்.

இதை பல அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர். பிரச்சாரம் செய்த ஒருவர் கூடவா வாக்களிக்கவில்லை என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கார்த்திகை கலாய்த்து பல மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

bjp-single-vote
bjp-single-vote

`
இதை கண்ட கார்த்திக் தன் குடும்பத்தினருக்கு தான் போட்டியிட்ட 4வது வார்டில் ஓட்டு இல்லை என்றும், 9வது வார்டில் அவர்களுக்கு ஓட்டு இருந்ததாக தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்த முறை தான் மீண்டும் அதே வார்டில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடுவேன் என்று கூறியுள்ளார்.