சீன மக்கள் வினோத பிறவிகள் என்றே சொல்லலாம். அவரவர் தட்டில் இருக்கும் உணவை விமர்சிக்க கூடாது தான். ஆனால், இவர்கள் தட்டில் இருக்கும் உணவுகளை பார்க்கும்போது, நமக்கு சாப்பாடு வயிற்றுக்குள் இறங்க மறுக்கிறது. புழு பூச்சியை கூட விட்டு வைக்காத இந்த மக்கள், தற்போது தக்காவை சாப்பிட கூட ரெடி ஆகி விட்டனர்.
இதில் ஹைலைட் என்னவென்றால், இதற்க்கு பணத்தை அல்லி இரைக்கிறார்கள். பறவையின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைக்க சீன மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூப் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக சீன மக்கள் நம்புகின்றனர்.
அதாவது இந்த பறவையின் எச்சம் நிறைந்த சூப் சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும் சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
போற போக்கில் இதை பரப்பும் சீனர்கள்
சீன மக்கள் மட்டுமல்லாது தற்போது சமூக வலைதளத்தின் ஆதிக்கத்தால், பறவை எச்சில் சூப், உலகம் முழுவதும் அறியப்பட்டு, அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை கேட்கும்போதே நமக்கும் குமட்டுகிறது, எப்படி தான் சாப்பிடுகிறார்களோ என்று நம்மில் பலர் நினைப்போம்.
சரும பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீன மக்கள், தரையில் உருவத்தை கூட விட்டு வைப்பதில்லை. மேலும் வளர்ந்து வரும் சோசியல் மீடியா, கலாச்சாரத்தை நமக்குள்ளும் பரப்பி விடுகிறது. இருப்பினும், இதை சாப்பிடுவதை கனவிலும் யோசித்து பார்க்க முடியவில்லை.
ஆனால் இதின் விலையை நீங்கள் கேட்டால் ஆடி போய்விடுவீர்கள். 500 கிராம் உலர்ந்த பறவை கூடின் விலை ₹1.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி எல்லாம் பிசினெஸ் பண்றாங்க.!