வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

AI டெக்னாலஜி மூலம் ரயில்வேயில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.. இனி வெயிட்டிங் லிஸ்ட் ஈசியா கன்ஃபார்ம் ஆகிடும்

Biggest change in railways: பொதுவாக நமது நாட்டில் உள்ள மக்கள் எங்கே போக வேண்டும் என்றால் அவர்கள் விரும்பி போகும் போக்குவரத்து ரயில்வே தான். ஏனென்றால் அதுதான் டிக்கெட்டின் விலை குறைவு மற்றும் போகக்கூடிய இடங்களுக்கு சரியான நேரத்திலும் பாதுகாப்பாக கொண்டு போய் விடக்கூடிய ஒரு போக்குவரத்து என்பதால் பெரும்பாலான மக்கள் ட்ரெயினில் தான் விரும்பி போவார்கள்.

ஆனால் பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்றால் அவ்வளவு ஈசியாக டிக்கெட் கிடைப்பதில்லை. அதிலும் ஏதாவது ஒரு விசேஷ நாட்களில் குறைந்தது 120 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது 60 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு விஷயம் வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதனை அடுத்து தற்போது வளர்ந்து வரும் AI டெக்னாலஜியை பயன்படுத்தி ரயில்வே இன்னும் மிகப்பெரிய மாற்றம் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே உணவு செக்கிங் பிரிவுகளில் ரயில்வே நிர்வாகம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். அதாவது உணவு தயாரிக்கும் இடத்தில் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது என்பதை கண்டறிய உணவு தயாரிக்கும் இடங்களில் AI கேமராவை பொருத்தப்பட்டிருக்கிறது.

அதே மாதிரி ஏசி பிரிவுகளில் கொடுக்கப்படும் பெட் சீட்டுகள், படுக்கும் சீட்டுகள் எல்லாம் தூய்மையாக இருக்கிறதா என்பதை கண்டறியவும் AI கேமரா பயன்படுத்தப்படுகிறது. இதனை அடுத்து ரயில்வே டிக்கெட்டில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரயில்வே முடிவு செய்து இருக்கிறது. அதாவது ரயில்களில் எங்கு சீட்டுகள் புல்லாகி இருக்கிறது என்பதை கண்டறிய AI மாடல் உதவும்.

இது பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும் விதமாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் AI மாடல் பயன்படுத்துவது ரயில் பயணிகளுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே இதை ஒரு குறிப்பிட்ட ரூட்டில் பயன்படுத்தியிருக்கிறோம். அதன் பிறகு அந்த ரூட்டில் கன்ஃபார்மான டிக்கெட் 30% மேல் அதிகரித்திருக்கிறது.

பொதுவாக ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னால் தான் சாட் ரெடி பண்ணி வெளியிடுவார்கள். இந்த இடத்தில் தான் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம். அதாவது கன்ஃபார்மான டிக்கெட்களை ஆய்வு செய்யும் AI மாடல் 3 ஸ்டேஷனுக்கு முன்னதாகவே எத்தனை சீட் காலியாக இருக்கும் என்பதை கணித்து விடும். அதை வைத்து வெயிட்டிங் லிஸ்டில் காத்திருப்பவர்களுக்கு சீட் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் அதிகபட்ச பயனாளிகளுக்கு கன்ஃபார்ம் டிக்கெட் வழங்க முடியும். வெயிட்டிங் லிஸ்ட் கிளியர் ஆகிவிடும், ஸ்டேஷன் ரீதியாக சீட்டும் பிரிக்கப்பட்டு அவைகள் அனைத்தும் ஒதுக்கப்பட்டு விடும். இதில் தான் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கே டிக்கெட் தேவை அதிகமாக இருக்கும் நிலைகளை கண்டறிந்து அதற்கேற்றப்படி டிக்கெட்களை வழங்க ரயில்வே திட்டமிட்டதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

Trending News