ராஜமௌலியின் RRR பட நடிகருக்கு ஜோடியான பிக்பாஸ் வனிதா.. இது என்னடா புது கூத்து!

ராஜமௌலி தற்போது 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஒருவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் பிக்பாஸ் வனிதா.

ராஜமவுலியின் சினிமா உச்சம் பற்றி அனைவருக்குமே தெரியும். ராஜமவுலி இயக்கும் படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரமாவது கிடைத்து விடாதா என பல நடிகர்கள் தவம் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு அவரது படங்களில் சின்ன கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

அப்படி தற்போது ராஜமௌலி கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி கொண்டிருக்கும் ரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நம்ம ஊர்க்காரர் சமுத்திரக்கனி. சமீபகாலமாக சமுத்திரக்கனிக்கு தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமுத்திரகனி ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையை தெலுங்கு நடிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளதாம். அந்த வகையில் அடுத்தடுத்து உருவாகும் தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் சமுத்திரக்கனிக்கு ஒரு சின்ன வேடமாக கொடுக்க ரெடியாக உள்ளார்களாம்.

இப்படியிருக்கையில் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தடுமாறிக் கொண்டிருக்கும் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் வனிதா ஒப்பந்தமாகியுள்ளார். வனிதாவுக்கு வராத நெகட்டிவ் விமர்சனங்களே கிடையாது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவது கோலிவுட்டுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதானாம்.

vanitha-prashanth-andhagan
vanitha-prashanth-andhagan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்