கடந்த 3 சீசனில் பிக் பாஸ் வின்னர்களின் தற்போதைய நிலை தெரியுமா.? அட கடவுளே நம்ம ஆரியாது தப்புவாரா.?

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி நெதர்லாந்து நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளின் வாயிலாக பிக் பிரதர், பிக் பாஸ் என்ற பெயர்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் மட்டும் இந்தி, கன்னடம், பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் தமிழில் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோலிவுட்டின் ஜாம்பவானான உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்  என்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் கேள்வியாக உள்ளது. ஏனென்றால் இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் மூலம் இன்று வரை எதுவும் சாதிக்காமல் இருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களின்  தற்போதைய நிலை இதோ:

பிக்பாஸ் முதல் சீசன் – ஆரவ்: கடந்த 2017 ஆம் ஆண்டு முதன் முதலாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஆரவ். இவர் ஏற்கனவே ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆரவ் சினிமாவில் நல்லதொரு இடத்தைப் பிடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அவர் நாயகனாக நடித்து 2019 இல் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. தற்போது இவரது நடிப்பில் ராஜபீமா என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்காக காத்திருக்கிறது. மேலும் இன்றுவரை பிக்பாஸ் ரசிகர்கள் ஆரவ் மீது கொண்டிருந்த  நம்பிக்கை முழுமையடையாமல் தான் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 2 – ரித்விகா: கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் இன் இரண்டாவது சீசனில் ரித்விகா வெற்றி பெற்றார். இவர் இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரவினார்.

மேலும் பிக் பாஸ் இன் வெற்றிக்குப்பின் ரித்விகாவிற்கு சினிமாவில் நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ரித்விகா சினிமா உலகில் தனக்கான நிரந்தரமான இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறார். ஏனென்றால் இன்று வரை சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த ஒரு படவாய்ப்புகள் அமையவில்லை.

பிக் பாஸ் சீசன் 3 – முகேன் ராவ்: கடந்த 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் வனிதா விஜயகுமார், மீராமிதுன், சரவணன், அபிராமி, கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர்தான்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தர்ஷன் வெற்றிபெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென மலேசியாவைச் சேர்ந்த முகின்ராவ் எனும் பாடகர் வெற்றி பெற்றது பிக்பாஸ் ரசிகர்களுக்கே ஆச்சரியத்தை அளித்தது. இதன் பிறகு, முகேன் தமிழ் சினிமாவில் பாடகர் ஆகி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இன்று வரை அப்படி எந்த விஷயமும் நடக்கவில்லை.

பிக்பாஸ் சீசன் 4 – ஆரி அர்ஜுனன்: கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஜனவரி 17ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aari
Aari

மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ், ஆரிக்கு வெற்றியை கொடுத்துள்ளது. கிடப்பில் கிடந்த சில படங்கள் வெளிவர உள்ளது அதுமட்டும் இல்லாமல் புதிய படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்த பட வாய்ப்புகளால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்