பிக்பாஸ் சீசன் 5 விஜய் டிவி செய்த பல மாற்றங்கள்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய் டிவியில் விரைவில் உருவாக உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டுவர விஜய் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு தகவல் காட்டுத் தீயை விட வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான அட்வான்ஸ் தொகை ஆறு மாசத்துக்கு முன்னாடியே அவருக்கு கொடுக்கப்பட்டது. அதை தேர்தலில் செலவு செய்து விட்டாராம்.

அதனைத் தொடர்ந்து கடந்த சீசன்கள் பெரிய அளவுக்கு சுவாரசியமில்லாமல் விஜய் டிவிக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்ததால் இந்த முறை விஜய் டிவி பிரபலங்களை குறைத்துவிட்டு சினிமா பிரபலங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான் முதல் கட்டளை.

அதனைத் தொடர்ந்து கடந்த சீசன்களை விட இரண்டு மடங்கு அதிகமான பட்ஜெட்டில் செட் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்து விட்டதாம் விஜய் டிவி. இதனால் விஜய் பட ரேஞ்சுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் பிக்பாஸ் வீடு உருவாகி வருகிறதாம்.

அதைவிட முக்கியம் இந்த முறை டாஸ்க்குகள் மிகவும் சுவாரசியமாக இருக்க வேண்டும் எனவும், இதனால் வெளிநாட்டு டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்த்து அந்த மாதிரி புதிய விளையாட்டுகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்களாம்.

biggboss-5-tamil
biggboss-5-tamil

இதனால் என்றும் இல்லாத அளவு இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி களைகட்டப் போகிறது என இப்போதே விஜய் டிவிக்கு பெரிய நம்பிக்கை வந்துவிட்டதாம். இருந்தாலும் அவர்கள் தேர்வு செய்யும் ஆட்களில் தான் சுவாரஸ்யம் இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

- Advertisement -