கமலை கழுவி ஊற்றிவிட்டு பிக்பாஸ் போட்டியாளராக வந்த நபர்.. உன்ன கூப்பிட்டதே உள்ள வச்சி செய்யதான் தம்பி

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பல பேட்டியாளர்கள் அறிமுகம் இல்லாத நபர்களாகவே உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னரே இவர்கள் மக்கள் மத்தியில் தெரியவந்துள்ளனர். அந்த அளவிற்கு பிரபலம் இல்லாத நபர்கள் தான் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த சீசனில் 4வது போட்டியாளராக பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து தற்போது ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை தொடங்கி தமிழ் சினிமா விமர்சனங்களை கூறி வந்தார்.

இதுதவிர பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இன்னும் தெளிவாக உங்களுக்கு புரியும்படி கூற வேண்டும் என்றால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கண்ணாவின் பாய் பெஸ்டியாக வந்து அதர்வாவை வெறுப்பேற்றுவாரே அவர் தான் இந்த அபிஷேக் ராஜா.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும்போதே டமாலு டமாலு பாடலுக்கு அசத்தலாக நடனமாடி மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள அபிஷேக் இங்கு இருக்க போகும் நூறு நாட்களில் எத்தனை விமர்சனங்களை செய்ய போகிறாரோ? சரி அதை பின்னர் பார்த்து கொள்ளலாம். தற்போது விஷயம் என்னவென்றால் இந்த அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பு இந்நிகழ்ச்சி குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அபிஷேக் கூறியுள்ளதாவது, “நான் கண்ணால் பார்ப்பதை கூட நம்ப மாட்டேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த 100 நாளில் தமிழ்நாடு சிஎம் ஆவதற்காக நீங்க பண்ற அலப்பறை இருக்கே கேட்டா பிக்பாஸ்னு சொல்றீங்க” என பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கலாய்த்து பேசியுள்ளார்.

abishek-raaja-biggboss
abishek-raaja-biggboss

இப்படி அந்த நிகழ்ச்சியை கழுவி ஊற்றிவிட்டு நீங்களே அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளீர்களே என நெட்டிசன்கள் இவரை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பாஸ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்