சுக்கு நூறாக கிழிந்த பிக்பாஸ் ராஜமாதாவின் முகத்திரை.. ஒன்று கூடி ஆப்பு வைத்த ஹவுஸ் மேட்ஸ்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விட்ட நிலையில் கூட யார் டைட்டிலை அடிப்பார்கள் என்ற குழப்பம் ஆடியன்ஸுக்கு அதிகமாக இருக்கிறது. அந்த அளவுக்கு ஒருவர் கூட இந்த விளையாட்டின் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்பதுதான் உண்மை.

அதே போன்று டைட்டிலுக்கு தகுதியான ஆள் யார் என்பதும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் மொத்த வன்மத்தையும் கக்கி வருகின்றனர். இதை இன்று வெளியான ப்ரோமோவில் கூட கமல் வெளிப்படையாக போட்டு உடைத்து இருந்தார்.

Also read: அவ்வளவு டீலிங் பேசியும் பிரயோஜனம் இல்ல.. பிக்பாஸை விட்டு வெளியேறும் 2 வேஸ்ட் பீஸ்

வஞ்சத்தினால் ஜெயிக்க பார்க்கிறார்கள் என்று கமல் சொன்ன நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ வேற லெவலில் இருக்கிறது. அதாவது இந்த வாரம் ஏகப்பட்ட ரணகள சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது. அதை வைத்து தற்போது கமல் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அதன் படி வீட்டில் நியாயமா அவங்க இதை செஞ்சு இருக்கணும். ஆனா செய்யல, அப்படிங்கறது யார் என கமல் கேட்கிறார். உடனே விஜய் வர்மா விச்சுவின் பெயரை கூறி அவங்க பழைய மாதிரி இல்லை என தற்போதைய நிலையை அப்படியே போட்டு உடைத்தார்.

Also read: புகழ்ச்சி எனக்கு வஞ்சம் உனக்கு.. ஆழம் தெரியாமல் காலை விட்ட ஹவுஸ் மேட்ஸ், ரோஸ்ட்டுக்கு தயாரான ஆண்டவர்

அதற்கு விசித்ரா என் கையை கட்டியிருந்ததால் என்னால் சண்டையை விளக்க முடியவில்லை என்று கூறினார். உடனே கூல் சுரேஷ் வேறு யாராவது அந்த இடத்தில் இருந்திருந்தால் நான் கட்டை ஆபத்து விட்டு இருப்பேன். ஆனால் விசித்ரா ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் குளிர் காய்வார். சண்டையை நிறுத்த மாட்டார் என்றார்.

இது நிச்சயமான உண்மை. இதுக்கு ஆடியன்ஸ் தரப்பில் இருந்து கைதட்டலும் பலமாகவே கிடைக்கிறது. அந்த அளவுக்கு விசித்ராவின் முகத்திரை சமீப நாட்களாக வெளிப்பட்டு வருகிறது. இந்த ப்ரோமோ தான் இப்போது இன்றைய எபிசோடுக்கான ஆர்வத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.