கவின் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் ஹீரோவாக கமிட்டான புதிய படம்.. டைட்டில் வேற லெவல்!

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பலரை உருவாக்கி தந்தப் புகழ் விஜய் டிவியையே சாரும். ஏனெனில் அந்த சேனலின் பணிபுரிந்தோரில் பலர் தற்போது ஹீரோ, காமெடியன், குணசித்திர வேடம் என ஏதாவது ஒரு வகையில் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இன் வெற்றியாளர் ஆன முகின் புதிய படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் மலேசியாவில் இருந்து வந்த பாடகர் முகின். தற்போது முகின் ராவ் கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறாராம்.

அந்த வகையில் கவின் இயக்கத்தில், முகின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு ‘வேலன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கலைமகன் முபாரக் என்பவர் தயாரித்து வருகிறாராம்.

மேலும் இந்தப் படம் அழகான காமெடி ரொமான்ஸ் படமாக உருவாகிறது என்றும், முகினுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் மீனாட்சி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பிரபு, சூரி, மரியா, தம்பிராமையா, ஹரிஷ் பேரடி, ஸ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகிய பலர் முக்கியமான வேடங்களில் நடிப்பதாகவும் தெரிகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் போன்ற அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -