இது விதியா இல்ல தலைவிதியா.. கேள்வி கேட்க காத்திருக்கும் கமல்

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் பல குழப்பங்களும், சண்டைகளும் நடந்து வந்தது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் அனைவரும் எப்படா சனிக்கிழமை வரும் என்று காத்திருந்தனர்.

போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் ஆண்டவரின் தரிசனத்துக்காக காத்திருந்தனர். சற்று முன்பு வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன் தனக்கே உரித்தான பாணியில் பிக்பாஸ் வீட்டில் நடந்த குழப்பங்களை கூறுகிறார்.

அதாவது இது விதியா, விதியில் இருக்கா, விதிமீறலா, விதிவிலக்கா இல்ல என் தலைவிதியா என்று இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் செய்த பிரச்சனையை காமெடியாக கூறுகிறார்.

மேலும் இந்த வாரம் போட்டியாளர்கள் சனிக்கிழமை வரட்டும் நான் கமல் சார்கிட்ட பேசிக் கொள்கிறேன் என்று கூறியதை நினைவு படுத்திய கமல், நமக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கு என்ற ட்விஸ்ட்டுடன் ப்ரோமோ முடிகிறது. ப்ரோமோவை பார்க்கும்போது மக்கள் பலரும் எதிர்பார்த்த குறும்படம் இந்த வாரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் சில நாட்களாக கொஞ்சம் அதிகப்படியான வார்த்தைகளை பேசும் தாமரையை கமல் இன்று கண்டிப்பார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். சென்ற வாரம் போலவே இந்த வாரமும் கமல் சாட்டையை எடுத்து சுழற்றுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்