புதிய காதலால் பழைய காதலனை கழட்டிவிட்ட ஜூலி.. கலாய்க்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்றவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவருடைய வீரத்தை பார்த்து புகழ்ந்த மக்கள் பிக்பாஸில் இவரை நன்றாக கலாய்த்தனர்.

இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மாடலிங்கில் பிஸியானார் ஜூலி. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி தன்னுடைய போட்டோக்களை அடிக்கடி ஷேர் செய்து வருகிறார். இவர் தமிழில் மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜூலி நேற்று அண்ணா நகர் காவல் நிலையத்தில் தன்னுடைய காதலன் மீது ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தன் காதலன் மனிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பைக், தங்கச் செயின் உள்ளிட்டவைகளை வாங்கி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.

இவரின் இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஜூலி ஏற்கனவே ஒருவருடன் காதலில் இருந்ததாகவும் அந்த காதல் முறிந்த நிலையில் மனிஷ் க்கும் ஜூலிக்கும் இடையில் நட்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தற்போது ஜூலி தன்னுடனான காதலை முறித்துக் கொண்டு வேறு ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் மணிஷ் குறிப்பிட்டுள்ளார். அதற்கான ஆதாரத்தையும் அவர் காவல் துறையில் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் ஜூலியின் புதிய காதலன் தன்னை விலக்கிக் கொள்ளும்படி மிரட்டுவதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் தன்மீது ஜூலி இவ்வாறு பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஜூலி இடமிருந்து பெற்ற பைக், செயின் முதலியவற்றை காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.

தன் காதலனை கழட்டி விட ஜூலி கூறிய இந்த பொய் குற்றச்சாட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜூலியின் செயல்பாடுகளை கலாய்த்து வரும் ரசிகர்கள் தற்போது அவரை நன்றாக வறுத்தெடுக்கின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை