Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த ஜூலியை விட நீங்க நூறு மடங்கு கேவலம்.. மறைமுகமாக கிழித்து தொங்கவிட்ட ரசிகன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ஜூலியானா. என்னதான் இவர் புரட்சி வீராங்கனையாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தாலும், வெளியே வரும்போது தனது பெயரை படு கேவலமாக கெடுத்துக் கொண்டார்.
ஏனென்றால் பிக்பாஸ் வீட்டை ஒரு நாடக மேடையாக மாற்றி, பொய், பித்தலாட்டம் என பல சதிகளை செய்து கேம் ஆடியதால் தமிழ் மக்களிடையே வெறுப்பை சம்பாதித்துள்ளார் ஜூலி. இதனால் அவர் மீது உள்ள வெறுப்பு இன்று வரை மக்களிடையே குறையாமல் தான் உள்ளது.
ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத ஜூலி படங்களில் நடிப்பது, விளம்பரப் படங்களில் நடிப்பது, போட்டோ ஷூட்களை எடுப்பது என பிஸியாக தனது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். அதே போல் அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவிட்டு வருகிறார் ஜூலி.

bb-juli-cinemapettai
அந்த வகையில் தற்போது ஜூலி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஜூலி சட்டை பட்டனை திறந்து, காலரை தூக்கி விட்டு அதனை புக்கால் மறைத்து படுகவர்ச்சியாக ஃபோட்டோவை எடுத்ததோடு, அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ஜூலியின் ஹேடர்ஸ் அவரை கண்டபடி காரித்துப்பி இருக்கிறார்கள்.
இந்தநிலையில் ஜூலி பதிவிட்ட புகைப்படத்திற்கு கீழுள்ள ஆபாசமான கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேஸ்புக்கில் ஒரு நபர் தனது கருத்தை எடுத்து வைத்திருக்கிறார். அந்தக் கருத்தை ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது ஹேடர்ஸ்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

juli-twit-cinemapettai
மேலும் அந்த பதிவில், ‘பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜூலியை விட நீங்கள் நூறு மடங்கு கேவலமான மனம் கொண்டவர்கள்’ என்று அந்த நபர் பதிவிட்டிருக்கிறார். இதனைத்தான் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ஜூலிக்கு இப்படி ஒரு ரசிகரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
