அடுத்த டாஸ்க்கில் கதற போகும் பிக்பாஸ் வீடு.. இதுக்குத்தானே நாங்க காத்திருந்தோம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ வான பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபைனல் நோக்கி முன்னேறி வருகிறது. பிக்பாஸ் டைட்டிலை யார் ஜெயிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் அனைவருக்கும் இருந்து வருகிறது.

ஒவ்வொரு சீசனிலும் குடும்பத்தினரை பிரிந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு சிறப்பு டாஸ்க் கொடுக்கப்படும். அதாவது போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கூறும் போது சிலைபோல் நிற்க வேண்டும்.

பின்னர் பிக்பாஸ் எப்போது சொல்கிறாரோ அப்போதுதான் அவர்கள் நகர வேண்டும். இந்த விளையாட்டின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவார்கள்.

இந்த நிகழ்வு பார்ப்பதற்கு உணர்வுபூர்வமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இதை ஒவ்வொரு வருடமும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதன்படி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த அந்த நிகழ்வு தற்போது பிக் பாஸ் வீட்டில் நடைபெற உள்ளது.

இதற்காக போட்டியாளரின் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா விதிமுறையின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த எபிசோட் வரும் வாரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இறுதிப் போட்டியை நோக்கி செல்லும் போட்டியாளர்கள் இனிவரும் காலங்களில் மிகவும் கடுமையான மற்றும் உடல் வலிமை சம்பந்தப்பட்ட போட்டிகளை சந்திக்க இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையிலும், அவர்கள் சோர்ந்து விடாமல் இருக்கவும் இந்த டாஸ்க் நடத்தப்படுகிறது.

குடும்பத்தினரை பார்த்த சந்தோஷத்தில் போட்டியாளர்கள் என்ன செய்வார்கள் மற்றும் தாங்கள் விரும்பும் போட்டியாளர்களின் குடும்பம் ஆகியவற்றைக் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்