பிக்பாஸ் முதல் நாமினேஷனில் வெளியேறப் போவது யார் தெரியுமா.? நேத்து பத்த வச்சது இன்னைக்கு எரியுது

பிக்பாஸ் – 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் இன்று நடக்க உள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாருன்னு சொல்ல சொல்லி ஒரு டாஸ்க் தரப்பட்டது. அதுல அதிகமா டிஸ்லைக் வாங்கியது அக்ஷராதான்.

இது கண்டிப்பா இன்னைக்கு நாமினேஷன்ல வரும்னு எதிர்பார்த்த நிலையில் நாமினேஷனுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களை கன்பெக்ஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ் நாமினேட் செய்ய விரும்பும் நபரை பற்றி கூற சொல்கிறார்.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் அக்ஷரா மற்றும் இசைவாணி பெயரை அதிகமாக சொல்கிறார்கள். அக்ஷரா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்ற காரணத்தை கூறி நாமினேட் செய்கின்றனர்.

மேலும் இசைவாணியால் இங்கு யாருடனும் இயல்பாக இருக்க முடியவில்லை என்ற காரணத்தையும் கூறுகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த வாரம் அக்ஷரா மற்றும் இசைவாணி நாமினேட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக வலம் வரும் அக்ஷரா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் நாமினேட் ஆகும் அக்ஷரா இந்த வாரம் ரசிகர்களால் காப்பாற்றப்படுவார் என்று தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்