அந்த முன்னணி நடிகருக்கு 4வது பொண்டாட்டியாக ரெடிதான்.. பரபரப்பைக் கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரபலங்களிடம் கோக்குமாக்கு கேள்விகளை கேட்டால், அதற்கு எடக்கு மடக்காக பதில் சொல்லி வருகிறார்கள் பிரபலங்கள். அதுவும் சினிமா பிரபலங்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பண்ணும் பந்தாவுக்கு அளவே இல்லை.

அப்படி ஒரு பிரபலம் சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவருக்கு நான்காவது மனைவியாக சென்றாலும் எனக்கு சம்மதம்தான் என கூறியுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் அந்த நடிகரை இப்படி சொல்லலாமா என்கிறார்கள்.

தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் தான் அஷு ரெட்டி(Ashu Reddy ).

பிக் பாஸுக்கு பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் மற்றும் பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் தனது ரசிகர்களுடன் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்க நேரலையில் உரையாடினார். அதில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடிகர் பவன் கல்யானை சந்தித்து பேசியதாகவும், என்னுடைய கனவு பலிக்க அவர் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் பவன் கல்யாணுக்கு நான்காவது மனைவியாக விருப்பமா? என கேள்வி கேட்டுள்ளார்.

pawankalyan-ashureddy-cinemapettai
pawankalyan-ashureddy-cinemapettai

இதற்கு நாசுக்காக பதில் சொல்லி அந்த கேள்வியை புறக்கணிக்காமல் எனக்கு விருப்பம் தான் என அஷு ரெட்டி கூறியுள்ளது தெலுங்கு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு முன்னணி நடிகரின் பெயருக்கு இந்த வகையில் கலங்கம் ஏற்படுத்தலாமா என அடுக்கடுக்கான கேள்விகள் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -