புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. அபிஷேக் செய்த டார்ச்சரால் காண்டான போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 தற்போது பல சர்ச்சைகளுடன் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

பிக்பாஸின் முந்தைய சீசன்களை பார்த்து வீட்டிற்குள் வந்த இவர்கள் தற்போது தங்களுக்கென ஒரு யுக்தியுடன் விளையாடி வருகின்றனர். அதில் தங்களுக்கு தோதான சிலரை மட்டும் கூட்டு சேர்த்து கொண்டு குரூப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அதில் பிரியங்கா, நிரூப், அபிஷேக், அண்ணாச்சி, ராஜு அனைவரும் ஒரு குழுவாக இருப்பதாக சக போட்டியாளர்கள் பலரும் விமர்சிக்கின்றனர். தற்போது இவர்கள் பிக்பாஸ் வீட்டில் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் நேற்று நடந்தது. இந்த விளையாட்டின் விதி முறைப்படி  நாமினேஷன் பற்றி யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆனால் நேற்றைய எபிசோடில் இந்தக் குழு தாங்கள் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது ராஜு அதை வெளியே சொல்லக் கூடாது என்பது விதி என்று கூறினார். ஆனால் அபிஷேக் அவரிடம் என்னிடம் சொல்ல மாட்டாயா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்து எரிச்சலடைந்த ரசிகர்கள் கமல் சார் இந்த வாரம் இதைப் பற்றி கேட்பீர்களா என்று கேள்வி எழுப்புகின்றனர். வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் சிறை ஒன்று இருக்கும் இந்த முறை அது இல்லை.

இருப்பினும் ரசிகர்கள் அபிஷேக்கை தூக்கி சிறையில் போடுமாறு பிக்பாஸுக்கு கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இந்த வாரம் அபிஷேக் எலிமினேட் ஆவதை காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

bigg-boss-5
bigg-boss-5
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்