ஒரே இரவில் சோஷியல் மீடியாவை கலக்கிய சிபி சக்கரவர்த்தி.. புத்திசாலித்தனமான மனுஷன்

பிக்பாஸ் வீட்டில் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த போட்டியாளராக இருப்பவர் சிபி சக்கரவர்த்தி. இவருடைய நேர்மையான அணுகுமுறையும், எதார்த்தமான குணமும் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை ஒப்பிடும் பொழுது இவர் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக அனைவருக்கும் தெரிந்தார். இதனால் இவரை இறுதிப் போட்டியில் காண அவரது ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 12 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு சிபி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த தகவலால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

கோல்டன் டிக்கெட் பெறுவதற்கான இறுதிப்போட்டி வரை வந்த அவர் நிச்சயம் அந்த டிக்கெட்டை பெறுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில், அமீர் அந்த டிக்கெட்டை தட்டிச் சென்றார். இவ்வாறு அனைத்து போட்டிகளிலும் தன்னுடைய முழு பலத்தை கொடுத்த அவர் சென்ற வாரம் எவிக்சன் பட்டியலில் இருந்த போது கடைசி ஆளாக சேவ் செய்யப்பட்டார்.

இதன் காரணமாகவும் அவர் அந்த பண பெட்டியை எடுத்து சென்றிருக்கலாம். சிபியின் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் ஒரு சிலர் அவர் சரியான முடிவை எடுத்திருப்பதாகவும் கருதுகின்றனர். ஏனென்றால் கடந்த சீசன்களில் எல்லாம் வெறும் 5 லட்சம் மட்டுமே பணப்பெட்டி வைக்கப்பட்டது.

அதனால் 12 லட்ச ரூபாய் என்பது ஒரு நல்ல ஆபர் தான், அப்படி இருக்கும்போது சிபி அந்த பணத்தை எடுத்துச் சென்றது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு என்று பலரும் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிபியின் இந்த முடிவு தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள சிபிக்கு பலரும் அவரது எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இந்த சீசனின் மிகச் சிறந்த போட்டியாளர் சிபி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.