பிக்பாஸில் ஸ்கெட்ச் போட்டு வெளியே அனுப்பும் பவானி.. 3 பேர் அவுட், இன்னும் ஒருத்தர் பாக்கி

பிக் பாஸ் வீட்டில் அமைதியான விஷ பாட்டிலாக வலம் வருபவர் நடிகை பவானி ரெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆர்மியை தொடங்கிவிட்டனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்தது.

அதன் காரணமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்கள் போகப்போக அவருடைய குணத்தைக் கண்டு கிண்டல் செய்யத் தொடங்கினார்.

அதாவது பிக்பாஸ் வீட்டில் ஸ்ருதியுடன் சேர்ந்து பவானி, தாமரையின் நாணயத்தை ஆட்டையை போட்டு ஒரு பிரச்சனையை உருவாக்கினார். இந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஸ்ருதி பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட் ஆகும் அளவுக்கு வந்தது.

பவானியுடன் நெருக்கமாக இருந்த ஸ்ருதி வெளியேறிவிட்டதால் அதன் பிறகு மதுமிதா உடன் பவானி நெருக்கமாக பழகி வந்தார். ஆனால் அதற்கு அடுத்த வாரத்தில் மதுமிதாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவானி அதன்பிறகு இசை வாணியுடன் பழகி வந்தார். ஆனால் இசை வாணியும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தன்னுடைய நண்பர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் தற்போது பவானி ஐக்கியுடன் பழகி வருகிறார்.

பவானியுடன் நெருங்கி பழகும் பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டை வெளியே வருவது தற்போது இணையதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கும் ஐக்கி பவானியின் புண்ணியத்தில் வெளியேறுவாரா அல்லது தப்பிப்பாரா என்பதை இந்த வார கடைசியில் நாம் பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்