பவானியிடம் ஜொள்ளு விடும் டான்ஸ் மாஸ்டர்.. நீங்க நடத்துங்க பாஸ்

கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் கூட்டமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வாரமும் தரமான சம்பவம் இருக்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு ட்விஸ்ட் கிடைத்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்தவர் நடன இயக்குனர் அமீர். அவர் வீட்டுக்கு வந்த நாள் முதல் பவானியுடன் சற்று நெருக்கமாக பழகி வந்தார்.

வீட்டில் தனியாக சுற்றிக்கொண்டிருந்த பவானியும், அமீருடன் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்று ரசிகர்கள் சில நாட்களாக கூறி வந்தனர். தற்போது அமீர் பவானியிடம் ஜொள்ளு விடும் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் பவானி படுக்கையில் பிரியங்காவுடன் அமர்ந்து உள்ளார். அங்கு வரும் அமீர், பவானியிடம் நான் உங்கள் ஃபேன் என்று சொல்லும்போது நீங்கள் ஒரு சிரிப்பு சிரித்தீர்கள். அது ரொம்ப க்யூட்டாக இருந்தது என்கிறார். அதற்கு உடனே பவானி வெட்கப்பட்டு சிரிக்கிறார்.

அவர்கள் இருவரையும் பார்த்து முழித்து கொண்டிருந்த பிரியங்காவிடம், அமீர் அவங்க ரொம்ப க்யூட்டா சிரிப்பாங்க என்று கூறி அசடு வழிகிறார். உடனே பவானி இந்த மாதிரி பீலிங் எப்ப இருந்து வந்தது உனக்கு என்று அமீரிடம் கேட்கிறார். இதைப் பார்த்த பிரியங்கா பவானியிடம் நீ அவருடைய கிரஷ் என்று சொல்கிறார்.

அதற்கு பவானி எனக்கு வெட்கமாக வருகிறது என்று சொல்வதைப் பார்த்து பிரியங்கா தலையில் அடித்துக் கொள்கிறார். பேக்ரவுண்டில் ரொமான்டிக்கான ஒரு பாடலுடன் ப்ரோமோ முடிகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மேலும் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாட வந்தீங்களா இல்ல ஜொள்ளு விட வந்தீங்களா என்று ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு அமீர் காதல் அம்பை பவானியின் மீது விடுகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்