பாலியல் தொழிலாளி வேடத்தில் களமிறங்கிய பிக்பாஸ் நடிகை.. ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் இப்படி மாறிய சோகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விடலாம் என பலரும் கனவு கண்டு கொண்டே இருக்கின்றனர். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அவர்களின் நிலைமை என்னாகும் என்பதை சமீப காலமாக பார்த்து வருகிறோம்.

விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் 3வது சீசன் போல் வேறு எந்த சீசனும் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஓவியா கலந்துகொண்ட சீசன் வரவேற்பைப் பெற்றது.

கடந்த நான்கு சீசன்களில் சிலருக்கு மட்டுமே படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் பிக்பாஸ் மூலம் ஹீரோயினாக மாறி விடலாம் என்ற கனவில் உள்ளே வந்து கொஞ்சம் எதிர்மறை கருத்துக்களை பெற்று வெளியேறியவர் தான் அபிராமி.

அதன்பிறகு தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய கெட்ட இமேஜை மாற்றிவிட்டார். இந்நிலையில் தற்போது தீவிரமாக பட வேட்டையில் இறங்கியுள்ள அபிராமி விரைவில் பாலியல் தொழிலாளியாக த லாஸ்ட் கஸ்டமர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

biggboss-abirami-cinemapettai
biggboss-abirami-cinemapettai

இந்த படத்தின் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது. ஹீரோயினாக வெள்ளித்திரையில் ஜொலிப்பார் என்று பார்த்தால் குணசித்திர நடிகையாக மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதிலும் இந்த மாதிரி பாலியல் தொழிலாளி வேடம் எல்லாம் கிடைத்தால் பின்னர் எப்படி ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இருந்தாலும் பாலியல் தொழிலாளியாக நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என சூடம் ஏற்றி சத்தியம் செய்து களத்தில் இறங்கியுள்ளார் அபிராமி.

- Advertisement -