என்னை விற்று பிழைக்க வேண்டிய அவசியமில்லை.. ரசிகரின் கமெண்ட்டால் டென்ஷனான பிக் பாஸ் அபிராமி

பிரபலங்களிடம் நாளுக்கு நாள் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அத்துமீறுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி நடிகைகள் மற்றும் நடிகர்களை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமியிடம் ரசிகர் ஒருவர் தவறான முறையில் கிண்டல் செய்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி. ஆனால் ரசிகர்கள் அதை வரவேற்காமல் தொடர்ந்து அபிராமியை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் அபிராமி. பிக் பாஸ் வீட்டுக்குள் முகன் என்பவருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதுமட்டுமில்லாமல் அந்த சீசனில் அபிராமி உடுத்தியிருந்த உடை முதற்கொண்டு அனைத்தும் ரசிகர்களிடையே ஒரு கெட்ட மனப்பான்மையை அபிராமியின் மீது ஏற்படுத்தியது.

அதன்பிறகு அபிராமி தல அஜித்துடன் நடித்த நேர்கொண்ட பார்வை படம் அவர் மீதான கெட்ட பார்வையை மாற்றியது. இருந்தாலும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர் ஒருவர், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் உள்ளூரை அழிக்கும் சுடுகாடு என அபிராமியின் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து கிண்டலடித்துள்ளார். அதற்கு டென்ஷனான அபிராமி, சமூக வலைதளங்களில் மற்றவர்களை மானபங்கப்படுத்தி பிழைப்பது ஒரு வேலையா என திட்டியுள்ளார்.

மேலும் உங்களைவிட என்னுடைய மாடலிங் துறை சார்ந்தது எனவும், என்னை விற்று வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனக்கு ஏதாவது ஆனால் என்னைப் பார்த்துக் கொள்ள அம்மாவும் சகோதரரும் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

என்னை விற்று பிழைக்க வேண்டிய அவசியமில்லை என அபிராமி கூறியதை இரட்டை அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் தொடர்ந்து அபிராமியை தாங்கியபடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

abirami-insta
abirami-insta
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்