ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என்ன இப்படில்லாம் விளையாடுறாங்க.. அன்பா விசாரிப்போமா, சாட்டையோடு வரும் விஜய் சேதுபதி

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியை வாரம் முழுவதும் பார்க்காத பார்வையாளர்கள் கூட சனி ஞாயிறுகளில் டிவி முன் ஆஜராகி விடுவார்கள். அந்த அளவுக்கு முதல் வாரத்திலேயே விஜய் சேதுபதி ஒட்டுமொத்த ஆடியன்ஸ் மனதையும் இம்ப்ரஸ் செய்து விட்டார்.

கமல் அளவுக்கு இருப்பாரா என்று கேட்டவர்கள் கூட இப்போது அவருக்கு பாஸ்மார்க் போட்டு விட்டார்கள். அதேபோல் ஆண்டவர் ஸ்டைல் வேறு மக்கள் செல்வன் ஸ்டைல் வேறு என்பதையும் அவர் காட்டிவிட்டார்.

கண்மூடி திறப்பதற்குள் பல தக் லைப் காட்டி போட்டியாளர்களையும் மிரள விட்டார் விஜய் சேதுபதி. அந்த வகையில் இந்த வாரம் அவர் விசாரிப்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. போனவாரம் அளவுக்கு பிராங்க் என்ற பெரும் கன்டென்ட் கிடையாது.

ஃபுல் ஃபார்மில் இறங்கிய விஜய் சேதுபதி

ஆனாலும் சிறு சிறு பஞ்சாயத்துக்கள் வீட்டுக்குள் இருக்கிறது. அதை எல்லாம் இன்று அன்போடு விசாரிப்பதற்கு மக்கள் செல்வன் தயாராகி விட்டார். தற்போது சுடச்சுட வெளியாகி உள்ள ப்ரோமோவில் போனவாரம் என்ன இப்படி விளையாடுறாங்க அப்படின்னு இருந்துச்சு.

ஆனால் இந்த வாரம் என்னடா இப்படில்லாம் விளையாடுறாங்க அப்படின்னு இருக்கு. ஆனா அவங்க இன்னும் நிறைய வளரனும் கொஞ்சம் அன்பா விசாரிப்போமா என அவர் ரொம்பவும் கூலாக சொல்கிறார். இதற்காகவே காத்திருந்த ஆடியன்ஸ் நீ கலக்கு தல என அவரை உற்சாகமூட்ட தவறாகி விட்டனர்.

ஆக மொத்தம் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை தாண்டி யாருக்கு மண்டகப்படி விழும் என தெரிந்து கொள்வதில் தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதில் தர்ஷா குப்தா ஏகப்பட்ட புகார் பத்திரம் வைத்திருப்பார் என தெரிகிறது. காத்திருப்போம் இன்றைய எபிசோடுக்காக.

- Advertisement -

Trending News